தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி மையங்களில் முறைகேடு? பாரதியார் பல்கலை நடவடிக்கை

கல்வி மையங்களில் முறைகேடு? பாரதியார் பல்கலை நடவடிக்கை

கல்வி மையங்களில் முறைகேடு? பாரதியார் பல்கலை நடவடிக்கை


UPDATED : அக் 06, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
பாரதியார் பல்கலையின் தொலைநிலைக்கல்வி மையங்கள், நாட்டில் 147 இடங்களில் உள்ளன. இந்த மையங்களில் முறைகேடு நடப்பதை தடுக்க, பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
தமிழகத்தைத் தவிர, கேரளா, மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட பகுதிகளில் பாரதியார் பல்கலையின் தொலைநிலைக்கல்வி மையங்கள் உள்ளன. இந்த மையங்களை, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நடத்துவர். அதற்கு பாரதியார் பல்கலை அங்கீகாரம் வழங்கும். சில கல்வி மையங்களில், நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதலாக தேர்வுக்கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல கல்வி மையங்களில் செய்முறைத் தேர்வும், செமினர் வகுப்புகளும் நடத்தப்படுவது இல்லை. பாரதியார் பல்கலையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள பல கல்வி மையங்கள், வேறு பல பல்கலையின் அங்கீகாரத்தையும் பெற்று ஒரே மையத்தில் வகுப்புகளை நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து 147 தொலைநிலைக்கல்வி மையங்களையும், மூன்றாவது நபர்களை வைத்து ரகசியமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது பாரதியார் பல்கலை. இவர்கள் தங்களை யாரென்று காட்டிக் கொள்ளாமல் மையங்களுக்கு நேரில் சென்று, எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற விபரங்களை சேகரித்து பல்கலைக்கு தருவர். இவர்கள் அளிக்கும் தகவலைப் பொறுத்து, கல்வி மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறுகையில், “ முறைகேட்டில் ஈடுபடும் தொலைநிலைக்கல்வி மையங்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us