தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘படித்த படிப்பால் தாய்நாடு பயன்பெற வேண்டும்‘

‘படித்த படிப்பால் தாய்நாடு பயன்பெற வேண்டும்‘

‘படித்த படிப்பால் தாய்நாடு பயன்பெற வேண்டும்‘


UPDATED : அக் 06, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
ராம்நகர் சபர்பன் பள்ளியின் முன்னாள் மாணவரும், தமிழக அரசின் தலைமைச்செயலருமான ஸ்ரீபதிக்கு, முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் ராம்நகர் சபர்பன் சொசைட்டி சார்பில், பாராட்டு விழா நடந்தது.
இப்பள்ளியில் படித்து, தற்போது பல்வேறு உயர் பதவி வகிக்கும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். பள்ளியில் தனக்கு பாடம் நடத்திய ராமச்சந்திர ராவ், ராமலிங்கம், ராமச்சந்திரன், சந்திரசேகரன், லஷ்மி, ராமமூர்த்தி உள்ளிட்ட முன்னாள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி, ஸ்ரீபதி கவுரவித்தார்.
இவ்விழாவில், கலெக்டர் பழனிக்குமார் பேசுகையில், “வெறும் கல்லை சிற்பமாக மாற்றும் திறன் படைத்தவர்கள் ஆசிரியர்கள். அப்படி தேர்ந்த ஆசிரியர்களால் செதுக்கப்பட்ட சிறந்த சிற்பம் தான் தமிழக அரசின் தலைமைச்செயலர் ஸ்ரீபதி. மாணவர் சமுதாயம் எப்படி முன்னேற வேண்டும் என்பதற்கு இவர் உதாரணம்,” என்றார்.
பாரதிய வித்யா பவன், கோவை மைய சேர்மன் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், “இன்றைய சமுதாயத்தில் நேர்மையாக இருப்பது சுலபமல்ல. பாராட்டு, விளம்பரத்தை விரும்பாதவர்களால் மட்டுமே பெரிய சாதனைகளை புரிய முடியும்.
இப்போதுள்ள கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, வசதிகள் 20 ஆண்டுகளுக்கு முன் இல்லை. குறைந்த வசதிகள் இருந்த போதும் நேர்மையான ஒரு அதிகாரி உருவாகியிருக்கிறார். இன்றைய கல்வி நிறுவனங்களால் இதேபோல் நேர்மையான அதிகாரியை உருவாக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஜனநாயகத்தின் வெற்றி, தலைமையை சார்ந்துள்ளது,” என்றார்.
தலைமைச் செயலர் ஸ்ரீபதி பேசியதாவது:
இன்று நான் உயர்ந்த நிலையில் இருப்பதாக கருதினால், அதற்கு எனது பள்ளி ஆசிரியர்களே காரணம். நல்ல குணம், பண்பு இல்லாதவர் சிறந்த மனிதர் அல்ல. ‘மாக்களை’ மக்களாக மாற்றும் இடம் தான் சிறந்த பள்ளி. கல்வி என்பது கற்று அறிவது. மாணவர்களிடம் அடக்கம், பண்பு, நேர்மை ஆகிய பண்புகளை பள்ளிகள் வளர்க்க வேண்டும்.
இப்பண்புகளை வளர்ப்பதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. இன்றைய பெற்றோர், தங்கள் பிள்ளைகளை உயர் படிப்புக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி, அங்கேயே ‘செட்டில்’ ஆக செய்து விடுகின்றனர். படித்த படிப்பால் தாய்நாடு பயன்பெற வேண்டும். நமது நாட்டுக்கென சிறந்த பண்பாடு, கலாசாரம் உள்ளது.
இந்தியன் என கூறுவதற்கு பெருமை அடைய வேண்டும். நமது பண்பாடு, கலாசாரம் மூலம் இந்தியா அடைந்த முன்னேற்றத்தை போல் வேறு எந்த நாடும் அடையவில்லை. இந்த பண்புகளை பெற பள்ளிகளே அடிப்படை. ஆகவே, மாணவர்களிடம் நற்பண்புகளை வளர்க்க பள்ளி ஆசிரியர்கள் முன் வர வேண்டும். சமுதாயத்துக்கு சேவை புரிய உதவும் பதவியாகவே தலைமைச்செயலர் பதவியை காண்கிறேன். இவ்வாறு, ஸ்ரீபதி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us