தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘ஷிப்ட்’ வகுப்பு பேராசிரியர்களுக்கு நிலுவை சம்பளம்

‘ஷிப்ட்’ வகுப்பு பேராசிரியர்களுக்கு நிலுவை சம்பளம்

‘ஷிப்ட்’ வகுப்பு பேராசிரியர்களுக்கு நிலுவை சம்பளம்


UPDATED : அக் 07, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


காரைக்குடி:
அரசு கல்லூரிகளில் ஷிப்ட் வகுப்புகள் நடத்திய பேராசிரியர், அலுவலர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 67 அரசு கல்லூரிகள் செயல்படுகின்றன.  ஏழை, நடுத்தர மாணவர்கள் உயர்கல்வி பெற, இக்கல்லூரிகளில் ஷிப்ட் வகுப்புகள் நடத்த, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டார். கடந்த ஆண்டு முதல் இவை நடைபெறுகின்றன.
ஷிப்ட் வகுப்பில் பாடம் எடுத்த பேராசிரியருக்கு, ஒரு மணி நேரத்துக்கு 150 ரூபாய், நாள் ஒன்றுக்கு கிளார்க்கிற்கு 100 ரூபாய், உதவியாளருக்கு 50 ரூபாய், கடைநிலை ஊழியருக்கு 20 ரூபாய் சம்பளம் என அறிவிக்கப்பட்டது.
அரசு அறிவித்தபடி, 2007-08 கல்வியாண்டிற்கான சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்த சம்பளத்தை வழங்க கோரி பேராசிரியர்கள் சங்கத்தினர் அரசை வலியுறுத்தி வந்தனர்.
கல்லூரியில் குறைந்தது 10 முதல் அதிகபட்சம் 30 பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் ‘ஷிப்ட்’ வகுப்புகளில் பணியாற்றினர். இவர்களுக்கு  சம்பளம் வழங்க, ஐந்து கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி கல்லூரி கல்வி இயக்குனர் நளினி ரவீந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us