தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் தெருவில் பாடம் நடத்திய மக்கள்

மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் தெருவில் பாடம் நடத்திய மக்கள்

மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் தெருவில் பாடம் நடத்திய மக்கள்


UPDATED : அக் 07, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


தேனி:
தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பொதுமக்கள் தெருவில் பாடம் நடத்தினர்.
தேனி மாவட்டம், போடி ஒன்றியம், ஏ.வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 175 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் ராஜலட்சுமியின் நடவடிக்கைகளைக் கண்டித்து, நேற்று பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோருடன் வகுப்பறைகளைப் புறக்கணித்து மரத்தடியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தினர். பெற்றோர் கூறியதாவது:
தலைமையாசிரியர் பாடம் நடத்துவதில்லை. அலுவலக வேலை, பயிற்சி எனக் கூறி, ஆசிரியர்களை வகுப்பு நடத்த விடாமல் தடுத்து விடுகிறார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பலருக்கு, உதவித்தொகை வழங்கவில்லை.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட உபகரணங்களை சொந்த பயன்பாட்டிற்குக் கொண்டு செல்கிறார். கூடுதலாக வகுப்பறைகள் கட்ட வழங்கிய நிதியிலிருந்து தரமற்ற முறையில் கட்டடப் பணி நடக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே கல்வித்துறை அதிகாரிகள், கலெக்டரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தலைமையாசிரியரை இடமாற்றம் செய்யும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவதில்லை என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு பெற்றோர் கூறினர்.
உதவி தொடக்கக் கல்வி அலு<வலர் தர்மராஜ் கூறுகையில், ‘தலைமை ஆசிரியர் மீது கூறப்படும் புகார்களை விசாரித்து நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்யவுள்ளோம்’ என்று கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us