தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி., நிறுவனங்களில் ஆள்எடுப்பு குறைப்பு; மாணவர்கள் கலக்கம்

ஐ.டி., நிறுவனங்களில் ஆள்எடுப்பு குறைப்பு; மாணவர்கள் கலக்கம்

ஐ.டி., நிறுவனங்களில் ஆள்எடுப்பு குறைப்பு; மாணவர்கள் கலக்கம்


UPDATED : அக் 09, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நான்கு ஆண்டுகளில் படிப்பை முடித்ததும், கைநிறைய சம்பாதிக்கலாம் என்ற கனவுடன் காத்திருக்கும் பொறியியல் மாணவர்களுக்கு, இது பெரும் இடியாக அமைந்துள்ளது.
சில ஆண்டுகளாக மாணவர்களிடம் பொறியியல் படிப்பு மீதான மோகம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில், 78 ஆயிரம் மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இரண்டையும் சேர்த்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு, மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. பொறியியல் படிப்பில் மூன்றாம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதில் தேர்வு செய்யப்படுபவர்கள், நான்காம் ஆண்டு படிப்பை முடித்ததும், அந்தந்த நிறுவனங்களில் பணியில் சேர்ந்து வந்தனர். சென்னை அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் மாநில அளவிலான வேலை வாய்ப்பு முகாமில், 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் தரும் நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொள்கின்றன.
இம்முகாம் மூலம், கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 2,231 மாணவர்கள் மட்டுமே பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஐ.டி., நிறுவனங்கள் பெருமளவில் நஷ்டத்தைச் சந்தித்திருப்பதால், தங்கள் நிறுவனத்தில் ஆட்கள் எடுப்பதை வெகுவாக குறைத்திருக்கின்றன.
இதுகுறித்து கல்வித்துறை மற்றும் ஐ.டி., நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது:
முந்தைய ஆண்டுகளில் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நவம்பர் மாதம் துவங்கிவிடும். கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நான்காக பிரிக்கப்பட்டதால், வேலை வாய்ப்பு முகாமை யார் நடத்துவது? என்பதில் சிறு குழப்பம் ஏற்பட்டு, இறுதியாக சென்னை அண்ணா பல்கலைக் கழகமே நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனால், கடந்த ஆண்டு மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கடந்த பிப்ரவரி மாதம் தான் துவங்க முடிந்தது. அப்போது, பல நிறுவனங்கள், தாங்கள் இந்த ஆண்டுக்கான ஆட்களைத் தேர்வு செய்யும் பணியை முடித்துவிட்டதாக தெரிவித்தன.
இந்திய ஐ.டி., நிறுவனங்கள் ஒன்றரை மாதங்களில் 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன. அதிகமாக பொறியியல் மாணவர்களை வேலைக்கு எடுத்துவரும் பெங்களூரை சேர்ந்த ஐ.டி., நிறுவனத்திற்கு மட்டும் 9,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் ஐ.டி., நிறுவனங்களை பெரிதும் பாதிக்கின்றன. அமெரிக்க தேர்தலுக்கு பிறகே நிலமை சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஐ.டி., நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தின்போது, மூன்று ‘ஆப் கேம்பஸ் ரெக்ரூட்மென்ட்’களை முடித்திருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஒரு ‘ஆப் கேம்பஸ்’ கூட நடத்தப்படவில்லை.
ஒவ்வொரு ஐ.டி., நிறுவனமும், 45 சதவீதம் அனுபவமுள்ளவர்களையும், 55 சதவீதம் புதிய மாணவர்களையும் தேர்வு செய்யும். புதிய மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையும், அனுபவமுள்ளவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு மேலும் சம்பளம் வழங்கப்படும்.
இதுவரை நூறு ஆட்களை தேர்வு செய்த ஐ.டி., நிறுவனங்கள், அவற்றை 90 பேராக குறைத்துள்ளன. மேலும் 65 சதவீதம் புதிய மாணவர்களையும், 35 சதவீதம் அனுபவமுள்ளவர்களையும் தேர்வு செய்யத் துவங்கியுள்ளன. இதன்மூலம், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்ய நினைக்கின்றன.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கி, பணியில் அமர்த்துவதையும் நிறுவனங்கள் தாமதப்படுத்தி வருகின்றன. சில நிறுவனங்கள் ஆட்கள் எடுப்பதைத் துவக்கியிருந்தாலும், முன்பைவிட வெகுவாக எண்ணிக்கையை குறைத்துவிட்டன.
கடந்த ஆண்டு 72 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்தனர். சர்க்யூட் பிரிவில் உள்ள 40 ஆயிரம் பேரில், 20 ஆயிரம் பேருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்தது.
மீதமுள்ளவர்களில் 8,000 பேருக்கு, 4,000 - 5,000 ரூபாய் என குறைந்த சம்பளத்தில் வேலை கிடைத்தது. சர்க்யூட் பிரிவில் 12 ஆயிரம் பேருக்கு பல்வேறு காரணங்களுக்கான வேலை கிடைக்கவில்லை.
இதர பிரிவுகளில் உள்ள 30 ஆயிரம் பேரில், 10 ஆயிரம் பேருக்கு ஐ.டி., நிறுவனங்களிலேயே வேலை கிடைத்தது. ‘கோர் கம்பெனி’களில் குறைந்த மாணவர்களுக்கே வேலை கிடைத்தது. மீதமுள்ளவர்களில் சிலருக்கு குறைந்த சம்பளத்தில் வேலையும், பலருக்கு வேலை கிடைக்காமலும் உள்ளது. இவ்வாறு கல்வித்துறை, ஐ.டி., நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us