தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/12 வயதுக்கு மேற்பட்டால் மட்டுமே தவறுகள் தெரியும்

12 வயதுக்கு மேற்பட்டால் மட்டுமே தவறுகள் தெரியும்

12 வயதுக்கு மேற்பட்டால் மட்டுமே தவறுகள் தெரியும்


UPDATED : அக் 09, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


லெய்டன்:
குழந்தைகள் 12 வயதுக்கு மேல் வளரும் போதுதான், தாங்கள் செய்த தவறில் இருந்து, அது தவறு என்பதையும், எதனால் தவறு ஏற்பட்டது என்பதையும் கற்றுக் கொள்கின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மேற்கொண்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8 வயது குழந்தைகள், அவர்கள் சரியான செயலை செய்தால், பாராட்டப்படுவதை வைத்து கற்றுக் கொள்கின்றன.
அவர்கள் தவறு செய்யும் போது, திட்டுவதால், அது தவறு என்பதை கற்றுக் கொள்வது இல்லை. ஆனால், 12 வயதுக்கு மேற்படும் போது, பாராட்டுதல்களை விட, தவறு செய்யும் போது அதை சுட்டிக் காட்டுவதால், அந்த குழந்தைகள் எதனால் தவறு, இந்த தவறை இனி செய்யக் கூடாது என்பதை புரிந்து கொள்கின்றன.
இதற்கு மூளை பகுதியில் உள்ள அணுக்களே காரணம். கம்ப்யூட்டர் திரை மூலம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்விலும் இது உறுதி செய்யப்படுகிறது. கம்ப்யூட்டரில், சரியான பதில் என்று தெரியவரும் போது, 8 வயது குழந்தைகளின் மூளைப் பகுதி சிறப்பாக செயல்படுகிறது. அதுவே தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டால், மூளைப்பகுதியில், எதிர்மறையான மாற்றம் ஏற்படுகிறது.
அதே போல, 12 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சரியான பதிலாக பாராட்டப்படும் போது, மூளைப்பகுதியில் பெரியளவில் சலனம் இல்லை. ஆனால், தவறான பதில் என்று தெரியவரும் போது, மூளையின் சிந்தனைத் திறன் அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us