தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரூ.3 கோடியில் கல்வி மேலாண்மை, பயிற்சி நிறுவன கட்டடம்

ரூ.3 கோடியில் கல்வி மேலாண்மை, பயிற்சி நிறுவன கட்டடம்

ரூ.3 கோடியில் கல்வி மேலாண்மை, பயிற்சி நிறுவன கட்டடம்


UPDATED : அக் 10, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
கல்வி மேலாண்மை மற்றும் பயிற்சிக்கான மாநில நிறுவனத்திற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் டி.பி.ஐ., வளாகத்தில் துவங்க உள்ளன.
‘எல்’ வடிவத்தில் மூன்று கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக இந்நிறுவனம் கட்டப்பட இருக்கிறது. பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாக மட்டத்தில் உள்ளவர்களுக்கு மேலாண்மை குறித்த பயிற்சி அளித்தல், ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் பல்வேறு பயிற்சிகளை அளித்தல், துறை சார்ந்த புள்ளி விவரங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக, கல்வி மேலாண்மை மற்றும் பயிற்சிக்கான மாநில நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.
டி.பி.ஐ., வளாகத்தில் ஆசிரியர் பயிற்சி இயக்குனரகத்திற்கு எதிரில் இந்நிறுவனம் கட்டப்பட இருக்கிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இந்நிறுவனம் இயங்கும். இதைக் கட்டி முடிப்பதற்கு தமிழக அரசு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
பயிற்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சிகளுக்காக மாநில அளவில் இருந்து வரும் அதிகாரிகள் இந்த மையத்திலேயே தங்குவதற்கு ஏற்ப எல்லா வசதிகளும் உருவாக்கப்பட உள்ளன.
‘எல்’ வடிவத்தில் பிரமாண்டமாக இரண்டு அடுக்குகளாக கட்டடங்கள் அமையும் என்றும், அதில் ஒரு தளம் முழுவதும் தொடக்கக் கல்வி இயக்ககத்திற்காக ஒதுக்கப்படும் என்றும் துறை வட் டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் கல்வி இயக்குனரகத்திற்கு எதிரில் பழைய கட்டடம் உள்ளது. அதில், ஆசிரியர் கல்வி இயக்குனரகத்தின் அலுவலக பிரிவுகள் இயங்கி வந்தன. இவை, சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. பழைய அலுவலக கட்டடம் விரைவில் இடிக்கப்படும். அதற்குப்பிறகு கல்வி மேலாண்மை நிறுவனத்திற்கான கட்டுமானப் பணிகள் துவங்கும். 15 மாதங்களில் கட்டி முடிப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us