தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொன்விழா காணும் வாராங்கல் என்.ஐ.டி., வசதியை மேம்படுத்த ரூ.100 கோடி!

பொன்விழா காணும் வாராங்கல் என்.ஐ.டி., வசதியை மேம்படுத்த ரூ.100 கோடி!

பொன்விழா காணும் வாராங்கல் என்.ஐ.டி., வசதியை மேம்படுத்த ரூ.100 கோடி!


UPDATED : அக் 11, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய அளவில் 10 சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாரங்கல் என்.ஐ.டி., நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவால் 1959ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது பொன்விழாவை கொண்டாடும் இக்கல்வி நிறுவனம் ஆன்-லைன் வகுப்புகள், புதிய கலந்துரையாடல் அரங்குகள் போன்றவற்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.
3 ஆயிரம் மாணவ, மாணவியர் அமரும் வகையிலான பிராமாண்ட அரங்கு, ஆயிரத்து 600 படுக்கைகளை கொண்ட அல்ட்ரா-மாடர்ன் விடுதி ஆகியவற்றை வரும் ஆண்டிற்குள் ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்த கல்வி நிறுவனத்தில் 3 ஆயிரம் மாணவ, மாணவியர் மற்றும் 200 ஆசிரியர்கள் உள்ளனர். பி.டெக்., மற்றும் எம்.டெக்., இன்ஜினியரிங் படிப்புகளில் மொத்தம் 23 பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இன்ஜினியரிங் மாணவர்களுக்காகவே பிரத்யேகமாக எம்.பி.ஏ., படிப்பு வழங்கப்படுகிறது. இதுதவிர, எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (டெக்) மற்றும் பிஎச்.டி., ஆகிய படிப்புகளையும் வழங்குகிறது.
இக்கல்வி நிறுவன இயக்குனர் ராவ் கூறுகையில், ‘11வது ஐந்தாண்டு திட்டம் நிறைவடைவதற்குள் (2012) கல்வி நிறுவனத்தின் மொத்த மாணவர் எண்ணிக்கையை 5 ஆயிரமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us