தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு ரூ.13,000 சம்பளம்

தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு ரூ.13,000 சம்பளம்

தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு ரூ.13,000 சம்பளம்


UPDATED : அக் 14, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த மாதம் வரை 2,000 ரூபாய் சம்பளம் வாங்கிய அரசு பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், அடுத்த மாதம் முதல் 13 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர்.
ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையிலேயே பல மாதங்கள் சம்பளம் பெற்றும், சில மாதங்கள் சம்பளம் பெறாமலும் வேலை பார்த்து கடும் துன்பம் அனுபவித்த ஆசிரியர்கள், அரசு நடத்திய சிறப்புத் தேர்வால் புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளனர்.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 1999-2000ம் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். முதலில் ஐந்து ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். பிறகு, ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்ய அரசு நடவடிக்கை எடுத்த போது, பல போராட்டங்களை நடத்தி மீண்டும் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தனர்.
என்றாவது ஒரு நாள் தங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் வேலை பார்த்து வந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. அக். 12ம் தேதி நடந்த சிறப்புத் தேர்வில் 1,784 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களில் 1,714 தேர்வர்களின் முடிவுகள் அன்று மாலையே வெளியிடப்பட்டன. 1,686 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 28 பேர் மட்டும் தோல்வியைத் தழுவியுள்ளனர். 70 பேரின் முடிவுகள், ஐகோர்ட் உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, ஓரிரு நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தப்பட உள்ளது. அதற்குப் பிறகு, தேர்வானவர்களின் பெயர் பட்டியல், பள்ளிக்கல்வித் துறையிடம் வழங்கப்படும். இந்த மாத இறுதிக்குள் கவுன்சிலிங் நடத்தி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்த போதும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கியுள்ளனர் என்பது பொதுத் தேர்வு முடிவுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. 2002-03ல் 99.8 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2003-04 முதல் 2006-07 வரையிலான பொதுத் தேர்வுகளில், தொடர்ச்சியாக 99.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஒப்பந்தக் காலங்களில் பல மாதம் சம்பளம் பெற்றும், சில மாதங்கள் சம்பளம் பெறாமலும் வேலை பார்த்துள்ளனர். இந்த ஆண்டு பல ஆசிரியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை இன்னும் சம்பளம் வழங்கவில்லை என்று ஆசிரியர்கள் குமுறினர்.
இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், “குறைந்த சம்பளத்தைக் கூட மற்ற ஆசிரியர்களைப் போல் எங்களுக்கு முறையாக வழங்கவில்லை. சொற்ப சம்பளத்தைக் கொண்டு மனைவி, குழந்தைகள், பெற்றோர் என பெரும் துன்பப்பட்டோம். அரசு நடத்திய சிறப்புத் தேர்வால் எங்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது,” என்றனர்.
இவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் நிலையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதன்படி, அடிப்படைச் சம்பளமாக 5,500 ரூபாய் வழங்கப்படும் என்றும், இதர படிகள் சேர்த்து 13 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுவர் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒப்பந்தக் காலங்களில் நன்றாக வேலை பார்த்த கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், இனிமேலும் அதேபோல் பணியாற்றுவர் என்று எதிர்பார்ப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us