தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரூ.50 கோடி செலவில் பாரதிதாசன் மேலாண்மை கல்வி மையம்

ரூ.50 கோடி செலவில் பாரதிதாசன் மேலாண்மை கல்வி மையம்

ரூ.50 கோடி செலவில் பாரதிதாசன் மேலாண்மை கல்வி மையம்


UPDATED : அக் 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம், திருச்சி காஜாமலையில் 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் புதிய வளாகத்திற்கு மாற்றப்படுகிறது.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த, பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன இயக்குனர் சங்கரன் கூறியதாவது:
பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் 1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்வி நிறுவனம், நாட்டின் சிறந்த 10 மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இக்கல்வி நிறுவனத்தின் 25வது ஆண்டையொட்டி ‘கிரெசிட்டா 2008’ நிகழ்ச்சி சென்னையில் 17, 18, 19ம் தேதிகளில் நடக்கிறது. இதில் பல மேலாண்மை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஆண்ட்ரு சிம்கின் நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். தற்போதைய வளாகத்திலிருந்து பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம், திருச்சி காஜாமலையில் 12 ஏக்கரில் அமைக்கப்படும் புதிய வளாகத்திற்கு மாற்றப்படவுள்ளது. இரண்டு ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் செலவில் இவ்வளாகம் அமைக்கப்படும்.
இவ்வளாகத்தில் நவீன வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்படும். இதற்கான செலவில் குறிப்பிட்ட தொகை மாணவர்களின் கல்விக் கட்டணத்திலிருந்து பெறப்படும். இதற்காக கல்விக் கட்டணம் 10 - 15 சதவீதம் உயர்த்தப்படும்.
தற்போது இரண்டு ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஐ.டி., துறை வீழ்ச்சியால், மாணவர்கள் பணியில் சேர விரும்பும் துறையாக, ‘மார்க்கெட்டிங்’ துறை மாறியுள்ளது. இரண்டாவது இடத்தில் ஐ.டி., உள்ளது. இவ்வாறு சங்கரன் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us