தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மூன்று மாநிலங்களில் மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள்

மூன்று மாநிலங்களில் மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள்

மூன்று மாநிலங்களில் மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள்


UPDATED : அக் 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குறிப்பாக புதிய தொழில் நிறுவனங்கள், இ-கவர்னன்ஸ் ஆகியவற்றை மையப்படுத்தி  இவை நிறுவப்படுகின்றன. இந்தியாவை அறிவுசார்ந்த நாடாக மாற்றும் குறிக்கோளோடு அமைக்கப்பட்ட தேசிய அறிவுசார் ஆணையம் (நேஷனல் நாலெட்ஜ் கமிஷன்) இதனை பரிந்துரைத்துள்ளது.
ஏற்கனவே, மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் கல்வி, பள்ளி கல்வி, அறிவியல் மற்றும் மருத்துவ கல்வி சம்பந்தப்பட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில், நாட்டில் மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
தேசிய அறிவுசார் ஆணைய தலைவர் சாம் பிட்ரோடா கூறியதாவது:
அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள், செயல்பாடுகள், திட்டங்களை மாநில அரசுகளிடம் பரிந்துரைத்து வருகிறோம்; 26 மாநிலங்களிடம் பரிந்துரைத்துள்ளோம்.
டில்லி, குஜராத், ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்கள் நவீன திட்டங்களுடன் மக்களிடம் தகவல்களை பரவலாக்க எங்களது பரிந்துரையை ஏற்றுள்ளன. இன்னும் சில மாநிலங்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது. அவர்களும் விரைவில் களத்தில் இறங்கலாம்.
ராஜஸ்தான் மாநிலம் இம்மாத இறுதிக்குள் இதற்கான அறிவிப்பை வெளியிடும்.
மேலும், நாட்டிலுள்ள ஆராய்ச்சி நிறுவனங்களை இணைத்து, அதன்மூலம் திட்டங்கள், கருத்துரைகளை பகிர்ந்துகொள்ள ‘நேஷனல் நாலெட்ஜ் நெட்வொர்க்’ உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இது துவக்கப்படும். இவ்வாறு பிட்ரோடா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us