சாப்பிடும் முன் கைகழுவும் பழக்கம்: 70 நாடுகளில் தீவிர பிரசாரம்
சாப்பிடும் முன் கைகழுவும் பழக்கம்: 70 நாடுகளில் தீவிர பிரசாரம்
UPDATED : அக் 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஐ.நா., அறிவித்துள்ள உலக கைகழுவும் தினத்தில், ஐந்து கண்டங்களில் உள்ள 70 நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி, பல்வேறு நாடுகளும், பல வகையில் விளம்பரப்படுத்தி வருகின்றன. அடுத்த ஐந்து நாட்களுக்கு இது பரபரப்பாக விளம்பரப்படுத்தப்படும்.
இது குறித்து, யுனிசெப்பை சேர்ந்த சுகாதார திட்ட ஆலோசகர் தெரெசி தூலே கூறுகையில்,‘ அனைவரும், சமைக்கும் முன், சாப்பிடும் முன், குழந்தைகளை குளிப்பாட்டிய பின் சரியான முறையில் சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும். கைகளை வெறும் தண்ணீரால், சுத்தப்படுத்துவதால், கிருமிகள் அழியாது. சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும், என வலியுறுத்துவதே, இதன் முக்கிய நோக்கம்’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், இந்தியா, பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை முன்னிறுத்தி, விளம்பரப்படுத்தி வருகிறது. மேலும், சினிமா நடிகர், நடிகையரும் இப்பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
