தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலாம் பிறந்த நாளில் பள்ளி மாணவர்களுக்கு ‘அப்துல் கலாம் விருது’

கலாம் பிறந்த நாளில் பள்ளி மாணவர்களுக்கு ‘அப்துல் கலாம் விருது’

கலாம் பிறந்த நாளில் பள்ளி மாணவர்களுக்கு ‘அப்துல் கலாம் விருது’


UPDATED : அக் 16, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள், கோவையிலுள்ள நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கம் சார்பில் மாணவர் தினமாகக் கொண்டாடப்பட்டது. நானி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், அச்சங்கத்தின் மாநில செயலாளர் கிருஷ்ணராஜ் வரவேற்றார்.
இவ்விழாவில் பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது:
வாழ்வில் உயர்நிலையை அடைய விரும்பும் அனைவருக்கும் அப்துல் கலாம் ஒரு ரோல் மாடல். பாரதியார் பல்கலை வெள்ளி விழாவில் பங்கேற்ற கலாம், ‘மாணவர்கள் படித்து முடித்தவுடன் எளிதில் வேலைவாய்ப்பு பெற வசதியாக, இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைகளும் இளங்கலை, முதுகலைப் படிப்புகளுடன் ஒரு டிப்ளமோ படிப்பையும் வழங்க வேண்டும்’ என்றார். நாட்டிலேயே முதன்முறையாக அத்திட்டத்தை பாரதியார் பல்கலை நிறைவேற்றி வருகிறது.
பாரதியார் பல்கலையில் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘சென்டர் பார் லைப் சயின்சஸ்’ ஆராய்ச்சி மையத்துக்கு கலாம்தான் பிள்ளையார் சுழி போட்டார். அவரது பிறந்த நாளான அக். 15ம் தேதி அம்மையத்தில் ஆராய்ச்சிகள் துவங்கப்பட்டு விட்டன.
இனி ஒவ்வோர் ஆண்டும் கலாம் பிறந்த நாளன்று, கோவை பள்ளிகளில் அறிவியல் தொடர்பான கண்டுபிடிப்பு செய்யும் இரு மாணவ மாணவியரை தேர்வு செய்து ‘அப்துல் கலாம் விருது’ வழங்கப்படும்.
விருது பெறும் மாணவர்களுக்கு அப்துல் கலாம் கையெழுத்திட்ட சான்றிதழ் வழங்கப்படும். அன்றைய தினம் பாரதியார் பல்கலையில் உள்ள பரிசோதனை ஆய்வகங்களை மாணவர்கள் ஆராய்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
கலாம் கூறியது போல் கனவு கண்டது போதும். இனி அவரது கனவை நிறைவேற்ற வேண்டியது முக்கியம். பெற்றோர், ஆசிரியர் மற்றும் அரசு சார்பில் இதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு, துணைவேந்தர் திருவாசகம் பேசினார்.
தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதாசன் பேசுகையில், “கலாமின் பிறந்த நாளை கொண்டாடுவதன் மூலம் மாணவர்களுக்கு எழுச்சி கிடைக்கிறது. அவர் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என பெருமைப்பட வேண்டும். உறக்கத்தில் வருவது அல்ல கனவு; உறங்க விடாமல் செய்வதுதான் கனவு. தேசத்தை உயர்த்துவதற்காக கனவு காண வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் சக்தியாக மாற கனவு காண வேண்டும்,” என்றார்.
விழாவில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கலாம் குறித்த கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ‘கலாம் ஒரு தீர்க்கதரிசி’ என்ற நூல் வெளியிடப்பட்டது.
கலாமின் வகுப்புத் தோழர் சம்பத்குமார், பாரதியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியன், பேராசிரியர் சூரியநாராயணன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முதன்மை கல்வி அலுவலர் நாராயணசாமி உட்பட பல்வேறு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், குழந்தைகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us