UPDATED : அக் 23, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுடில்லி: ‘சந்திரயான்-1’ வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்டதை பெரிதும் பாராட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ‘சந்திரயான்- 1 விண்கலம், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும் வரை, 15 நாளும் தனக்கு பதட்டம் நிறைந்ததாகவே இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்துக்கு அடிகோலிய முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர் அப்துல் கலாம். அவரது கனவு இப்போது நிறைவேறி உள்ளது. சந்திரயான்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து அவர் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.
அதில் மேலும் கூறியிருப்பதாவது:
பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணுக்கு ஏவும் முதல் முயற்சி வெற்றி பெற்றுள்ளதற்கு பாராட்டுக்கள். இத்திட்டத்தின் அனைத்து கட்டங்களும் வெற்றியடையும் என்று நம்புகிறேன். ஆனால், சந்திரயான் தனது சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும் வரை, ஒவ்வொரு நாளும் எனக்கு பதட்டம் நிறைந்ததாகவே இருக்கும். இவ்வாறு அப்துல் கலாம் கூறியுள்ளார்.
