தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/20 ஆண்டுக்கு பின் விரிவுரையாளர் பணி: நடையாய் நடந்து சாதனை

20 ஆண்டுக்கு பின் விரிவுரையாளர் பணி: நடையாய் நடந்து சாதனை

20 ஆண்டுக்கு பின் விரிவுரையாளர் பணி: நடையாய் நடந்து சாதனை


UPDATED : அக் 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை பல்கலைக் கழகத்தில் 1988ம் ஆண்டு விரிவுரையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவருக்கு, 20 ஆண்டுகளுக்கு பிறகு, மனிதாபிமான அடிப்படையில் விரிவுரையாளர் பணி வழங்கப்படுகிறது.
சென்னை பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராக பணிபுரிய, சந்திரகாந்த் என்பவர் 1988ம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போது நடந்த நேர்முகத் தேர்விலும் சந்திரகாந்த் கலந்து கொண்டு, விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.
சென்னை பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிய முதுநிலை படிப்பில் பெற்றிருக்க வேண்டிய மதிப்பெண்ணை விட சந்திரகாந்த் குறைவாக மதிப்பெண் பெற்றிருந்ததால், அவருக்கு விரிவுரையாளர் பணி வழங்கப்படவில்லை. ஆனால், சந்திரகாந்த் தனக்கு விரிவுரையாளர் பணியிடம் வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். 20 ஆண்டுகளாக தினசரி சென்னை பல்கலைக் கழகத்தையே சுற்றி வந்திருக்கிறார்.
சென்னை பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், சந்திரகாந்துக்கு விரிவுரையாளர் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் ஆங்கிலத் துறையில் கூடுதலாக ஒரு இடத்தை ஏற்படுத்தி, நிதிக் குழு, கல்விக்குழு, செனட் அனுமதியைப் பெற்று, அந்த இடத்திற்கு சந்திரகாந்தை பரிசீலிக்குமாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறியதாவது:
சென்னை பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிய முதுநிலை படிப்பில் தேவையான மதிப்பெண்ணை பெறாததால், அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. தனக்கு விரிவுரையாளர் பணி வழங்க வேண்டும் என்ற சந்திரகாந்தின் கோரிக்கையை இரண்டு, மூன்று கமிட்டிகள் நிராகரித்திருக்கின்றன.
ஆனால், தற்போது சந்திரகாந்துக்கு மனிதாபிமான அடிப்படையில் விரிவுரையாளர் பணி வழங்க முடிவு செய்யப்பட் டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் அவருக்கு பணி வழங்கப்படும். இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us