sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முன்னதாகவே பி.எட்., தேர்வு: டி.இ.டி.,யில் பங்கேற்க வாய்ப்பு

முன்னதாகவே பி.எட்., தேர்வு: டி.இ.டி.,யில் பங்கேற்க வாய்ப்பு

முன்னதாகவே பி.எட்., தேர்வு: டி.இ.டி.,யில் பங்கேற்க வாய்ப்பு


UPDATED : டிச 26, 2012 12:00 AM

ADDED : டிச 26, 2012 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 26, 2012 12:00 AM ADDED : டிச 26, 2012 10:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கட்டாய கல்விச் சட்டப்படி, ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய, டி..டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடத்தப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இத்தேர்வில், பி.எட்., தேர்வு முடிவிற்காக காத்திருப்போரும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது.

டி..டி., தேர்வில் வெற்றி பெற்ற போதும், பி.எட்., படிப்பிற்கான சான்றுகளைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால், பிரச்னை உருவானது. இதை போக்குவதற்கு, அரசு எடுத்த முயற்சியின் முதற்கட்டமாக, இந்தாண்டு பி.எட்., படிப்போருக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியார் கல்வியியல் கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "வரும் ஏப்ரலில் தேர்வுகளை நடத்தி, ஜூன் முதல் வாரத்திற்குள் சான்றுகளை வழங்க ஏற்பாடுகள் நடக்கிறது. செய்முறைத் தேர்வுகளை, பிப்ரவரி 18ல் துவக்கும் வகையில் ஆயத்தப்படுத்த அறிவுறுத்தல் வந்துள்ளது. முந்தைய ஆண்டுகளைவிட, இரு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன,&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us