தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை

அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை

அரசு பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை


UPDATED : டிச 28, 2012 12:00 AM

ADDED : டிச 28, 2012 09:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 28, 2012 12:00 AM ADDED : டிச 28, 2012 09:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், நீண்ட விடுப்பில் செல்லும் போது, அந்தப் பணியிடங்களில் மாற்று ஆசிரியர்களை நியமிக்காமல், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.

துவக்கப் பள்ளிகளில், ஆசிரியர்கள், மகப்பேறு மற்றும் மருத்துவ விடுப்பு போன்ற, நீண்ட கால விடுப்பில் செல்லும் போது, அப்பணியிடங்களில், வேறு பள்ளிகளிலிருந்து, மாற்று ஆசிரியர்கள் வந்து, வகுப்புகளை நடத்துகின்றனர். இதனால், இரு பள்ளிகளிலும் முழுமையாக வகுப்புகள் நடத்த முடியாமல், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.

கடந்த, 1997க்கு முன், நீண்ட கால விடுப்பு பணியிடங்களில் பணியாற்ற, தற்காலிக ஆசிரியர்கள் இருந்தனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படாமல் வகுப்புகள் நடந்தன. தற்போதும், அதுபோன்று, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் முறையை, அரசு மேற்கொள்ள, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

அரசு பள்ளிகளில் தற்போது, காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இப்போதே, மாவட்ட வாரியாக தற்காலிக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டால், விடுமுறை பணியிடங்களில், வகுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க வசதியாக இருக்கும். இதுகுறித்து, பல பள்ளிகளின் மேலாண்மைக் குழுச் சிறப்புக் கூட்டங்களில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us