தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளை ஊக்குவிக்கும் அறிவிப்பு

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளை ஊக்குவிக்கும் அறிவிப்பு

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளை ஊக்குவிக்கும் அறிவிப்பு


UPDATED : அக் 25, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் தொடர்ந்து காணப்படும் மனித வளத் தேவையை மத்திய அரசு உணர்ந்து இந்தத் துறையில் பல புதிய பயிற்சி நிறுவனங்களைத் துவங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இத்துறையில் இயங்கி வரும் பயிற்சி நிறுவனங்களை வலுவூட்டும் முயற்சிகளும் முழு வீச்சில் துவங்கியுள்ளன. இதற்கான முன்மொழிவு ஏற்கனவே மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டு இருந்தது.
சமீபத்தில் இந்த முன்மொழிவுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலமாக விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைக்கு அத்தியாவசியத் தேவையாகக் கருதப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவின்றி கிடைக்கும் என தெரிகிறது.
இத்துறைக்கு ஆண்டு தோறும் 2 லட்சம் பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் தற்போது இயங்கி வரும் கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு 12 ஆயிரம் பேரை மட்டுமே தரும் நிலை காணப்படுகிறது.
தற்போது வழங்கப்பட்ட ஒப்புதலின் விளைவாக இந்தியாவில் பல மையங்களில் இயங்கும் அரசுக் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி பள்ளிகள் போன்றவற்றில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை தொடர்புடைய படிப்புகளைப் படிக்க ஏதுவாகும்என நம்பப்படுகிறது.
10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதற்கான திட்ட நிதியாக ரூ.147.2 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த புதிய முன்மொழிவின் காரணமாக 11வது ஐந்தாண்டு திட்டத்தில் இத் துறைக்கு ரூ.495 கோடி ஒதுக்கப்படும். இது இத்துறைக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
இதுதவிர தற்போது இந்தியாவில் 28 மையங்களில் இயங்கும் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனங்களையும் (ஐ.எச்.எம்.) உணவுத் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களையும் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனங்களுக்கான நிதியானது 10 கோடியிலிருந்து 12 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வரும் 11வது ஐந்தாண்டு திட்டத்திலிருந்து 19 மையங்களில் புதிய மாநில ஐ.எச்.எம்களையும் 25 மையங்களில் மாநில உணவுத் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களை துவக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இத் துறையில் சேரும் பலரும் நிர்வாகப் பொறுப்புப் பணிகளிலே தான் சேர விரும்புகிறார்கள். இந்நிலையில் எதிர்காலத்தில் திறமையுடன் கூடிய அடிப்படை வேலைகளைப் பார்க்கும் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளும் உள்ளன.
மாநில அளவில் இயங்கும் ஐ.எச்.எம்கள் 3 ஆண்டுகளில் முடிக்கக்கூடிய பட்டப்படிப்புகளை ஐ.எச்.எம்கள் கிராப்ட் துறையில் வழங்கத் தயாராகி வருகின்றன. இதன் மூலம் தற்போது திறமையான பணியாளர்களுக்குள்ள கடுமையான தேவை குறையும் என நம்பப்படுகிறது.
முதல் முயற்சியாக அரசுத் துறையில் நிறுவப்படவுள்ள இக் கல்வி நிறுவனங்களுக்குப் பின் இத் துறையில் தனியார் பயிற்சி மையங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் தடம்பதிக்கக் காத்திருப்பவர்களுக்கு வளமான எதிர்காலம் வாசலில் காத்திருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us