UPDATED : டிச 31, 2012 12:00 AM
ADDED : டிச 31, 2012 09:52 AM
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த உலகத் தமிழ் இணைய மாநாடு கண்காட்சியை, ஆயிரக்கணக்கானோர் பார்த்து மகிழ்ந்தனர்.
கணினித் தமிழ் சங்க தலைவர் வள்ளி ஆனந்தன் கூறியதாவது: உலகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி பல்கலைக்கழக வளாகத்திலேயே மூன்று நாட்கள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட அரங்குகள் போடப்பட்டிருந்தன.
அந்த அரங்குகளில், காலை முதல் மாலை வரை, தமிழ் ஆர்வலர்கள், பல்கலைக் கழக மாணவ, மாணவியர் உட்பட ஆயிரக்கணக்கானோர் பார்த்து மகிழ்ந்தனர். மேலும், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தமிழ் மென்பொருட்கள், புத்தகங்கள், "சிடி"க்கள் விற்பனையாகின. இவ்வாறு வள்ளி ஆனந்தன் கூறினார்.
கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த "தினமலர்" அரங்கத்தை, பல்கலைக்கழக மாணவர்கள் வியந்து பார்த்தனர். உலகத் தமிழ் இணைய மாநாட்டில், "தினமலர் டாட்காம்" பற்றி அரங்கு அமைத்து இருந்தது. அதில், மொபைல் போனில் பல்வேறு செய்திகளை தினமலர் டாட்காமில் இருந்து பதிவு இறக்கம் செய்து பார்க்கும் விதத்தை பல்கலைக் கழக மாணவ, மாணவியர் வியந்து பார்த்தனர்.
தங்களுடைய மொபைல் போனிலும், தினமலர் டாட்காமில் இருந்து இணைய பக்கங்களை பதிவு இறக்கம் செய்தனர். ஆண்ட்ராய்டு, ஐபோன், பிளாக்பெர்ரி, நோக்கியா ஆகிய மொபைல் போன்கள் மூலம் தமிழில் தெளிவாக படிக்க முடியும் என்பதை, பல்கலைக்கழக மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
