தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எந்த கலாசாரத்தை பின்பற்றுவது? அமெரிக்க வாழ் இந்தியர்கள் குழப்பம்

எந்த கலாசாரத்தை பின்பற்றுவது? அமெரிக்க வாழ் இந்தியர்கள் குழப்பம்

எந்த கலாசாரத்தை பின்பற்றுவது? அமெரிக்க வாழ் இந்தியர்கள் குழப்பம்


UPDATED : ஜன 24, 2013 12:00 AM

ADDED : டிச 18, 2013 02:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2013 12:00 AM ADDED : டிச 18, 2013 02:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்வதேச சமூக அறிவியல் மாநாடு, சென்னை எத்திராஜ் கல்லூரியில் நேற்று துவங்கியது. மூன்று நாள் மாநாட்டில், சமூக அறிவியலின் புதிய கோணங்கள், அம்சங்கள், வளர்ச்சி முறைகள், புதுமை புகுத்தல் உள்ளிட்ட குறித்து, கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் விவாதிக்கின்றனர்.

மாநாட்டில் அமெரிக்கா ஜியார்ஜியா பெரிமீட்டர் கல்லூரி பேராசிரியர் சால்லி வர்கீஸ் பேசியதாவது: அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் குழந்தைகள், இந்திய கலாசாரத்தை பின்பற்றி ஒரு வாழ்க்கையும், அமெரிக்கா கலாசாரத்தை பின்பற்றி மற்றொரு வாழ்க்கையும் வாழ்கின்றனர். இதனால், அவர்கள் வாழ்க்கையில், தெளிவு இல்லாமல் போகிறது.

பருவ வயது அடையும் பெண்கள், பெற்றோருடன் நேரம் செலவிடவும், வாழவும் விரும்புவதில்லை. ஏதாவது காரணம் கூறி, பெற்றோருடன் விலகி, தனியாக வாழவே விரும்புகின்றனர். மேற்படிப்பிற்காக செல்லும் பெண்கள், வெளிநாட்டு ஆண்களை திருமணம் செய்து கொண்டு, இரு கலாசாரத்தையும் இணைந்து புது கலாசாரத்தை உருவாக்குகின்றனர்.

இந்திய கலாசாரத்தை, அந்நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். சில பெண்கள், அங்குள்ள ஆண்களை திருமணம் செய்து கொண்டு, ரகசிய வாழ்க்கையும் வாழ்கின்றனர். இவ்வாறு சால்லி வர்கீஸ் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us