தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு முகாம்

பட்டதாரி இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு முகாம்

பட்டதாரி இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : நவ 01, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


விழுப்புரம்:
சென்னை கல்லூரி கல்வி இயக்குனரக வேலை வாய்ப்பு பிரிவு சார்பில் தமிழகத்தில் பட்டதாரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு நேர்காணல் முகாம் கோயம்புத்தூர், திருச்சி, விழுப்புரத்தில் நடக்கிறது.
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் நடந்த நேர்காணலில் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் 7 ஆயிரத்து 500 முதல் 15 ஆயிரம் வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவன அலுவலர்கள் தெரிவித்தனர். தேர்வு செய்த நபர்களுக்கு விழுப்புரம் சேர்மன் ஜனகராஜ் வேலைக்கான உத்தரவை வழங்கினார்.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை  மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், ரிலையன்ஸ் நிறுவன அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரிலையன்ஸ் நிறுவன அலுவலர்கள் கூறுகையில், ‘பட்டப்படிப்பு  முடித்த அல்லது முடிக்காத  இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. சான்றிதழ்  இல்லாவிட்டாலும் மாணவர்கள் பேச்சு திறமையை கண்டறிந்து வேலை வாய்ப்பு தருகிறோம். வேலை உறுதி ஆணையை பெற்ற பிறகு சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையிலுள்ள ரிலையன்ஸ் கம்பெனியில் சான்றிதழ்களை கொடுத்து வேலையில் சேர்ந்து கொள்ளலாம்.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக இதனை நடத்த உயர்கல்வி அமைச்சர் உத்தரவுபடி கல்லூரி கல்வி இயக்குனரக வேலைவாய்ப்பு பிரிவு செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதனை ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். நவ. 1ம்தேதியும் முகாம் தொடர்ந்து நடக்கிறது. நல்ல வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us