தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குடியரசு தினத்தில் 10 லட்சம் மரக்கன்று: பாரதியார் பல்கலை

குடியரசு தினத்தில் 10 லட்சம் மரக்கன்று: பாரதியார் பல்கலை

குடியரசு தினத்தில் 10 லட்சம் மரக்கன்று: பாரதியார் பல்கலை


UPDATED : நவ 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
குடியரசு தினத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள வீடுகளில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட பாரதியார் பல்கலை திட்டமிட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது:
வரும் குடியரசு தினத்தன்று, ‘வீட்டுக்கு ஒரு செடி நடுவோம்; வெப்பத்தை தடுப்போம்’ என்ற திட்டத்தை மூன்று மாவட்டங்களில் பல்கலை செயல்படுத்தவுள்ளது. உலகெங்கும் ‘குளோபல் வார்மிங்’ எனும் புவி வெப்பமடைதல் நிகழ்வு அதிகரித்துள்ளது.
இதைக் கட்டுப்படுத்தும் பசுமை வளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு வருகின்றன. உலகெங்கிலும் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. மரங்களை வளர்ப்பதால் மட்டுமே புவி வெப்பமடைவதை கட்டுப்படுத்த முடியும். ஜன., 26ம் தேதி காலை 8.00 முதல் மாலை 6.00 மணிக்குள், கோவை பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் 2 லட்சம் பேர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள வீடுகளில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடவுள்ளனர்.
இந்த மாணவர்கள் குடியரசு தினத்துக்கு முன் வீடு, வீடாக சென்று, மரக்கன்று நட குழி எடுப்பர். பின், வீட்டிலுள்ளவர்களுக்கு என்னென்ன மரக்கன்று வேண்டும் என பட்டியல் தயாரித்து பல்கலைக்கு அனுப்புவர். பொதுமக்கள் விரும்பும் மரக்கன்றை, வனத்துறை இலவசமாக அளிக்கவுள்ளது. மரக்கன்றுடன், ஒரு பாக்கெட் உரமும் வழங்கப்படும்.
மரக்கன்று நடப்பட்டுள்ள வீடுகளில், மரக்கன்று வளர்ந்து வருவதை கண்காணித்து குறித்துக் கொள்ள ஒரு அட்டை வழங்கப்படும். வீடுகளில் மரக்கன்று நட்ட மாணவர்கள், தொடர்ந்து, ஆறு மாதங்ளுக்கு மரக்கன்று வளர்ச்சி பற்றி கவனித்து வருவர். இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us