தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர் பணி: விடுபட்டோருக்கு நடந்தது கவுன்சிலிங்

பட்டதாரி ஆசிரியர் பணி: விடுபட்டோருக்கு நடந்தது கவுன்சிலிங்

பட்டதாரி ஆசிரியர் பணி: விடுபட்டோருக்கு நடந்தது கவுன்சிலிங்


UPDATED : நவ 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
விடுபட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் கவுன்சிலிங், சென்னையில் டிச. 3ம் தேதி நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளிகளில் 7,500 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு தகுதி உள்ளவர்களுக்கு, ஏற்கனவே சான்றிதழ் சரி பார்த்தல் கவுன்சிலிங் நடந்தது. அழைப்புக் கடிதம் கிடைக்காதது உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக, 400 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை.
இப்படி விடுபட்டவர்களுக்கான சான்றிதழ் சரி பார்த்தல் கவுன்சிலிங், சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எனினும், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவில்லை.
இரண்டாவது முறையாக அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு, அவை கிடைக்காத நிலை ஏற்பட்டிருந்தாலும், பதிவு மூப்பு தகுதி வாய்ந்தவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த பிறகும், பலர் ‘ஆப்சென்ட்’ ஆகியுள்ளனர். இரண்டாவது சுற்றில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் கவுன்சிலிங் நடத்தப்படுமா என்பது குறித்து, தேர்வு வாரியம் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us