தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்திய கால்பந்து அணிக்கு தமிழக பள்ளி மாணவர் தேர்வு

இந்திய கால்பந்து அணிக்கு தமிழக பள்ளி மாணவர் தேர்வு

இந்திய கால்பந்து அணிக்கு தமிழக பள்ளி மாணவர் தேர்வு


UPDATED : நவ 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


நெய்வேலி:
இந்திய கால்பந்து அணிக்கு நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர் சிவப்பிரியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கான ஆசியக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் வரும் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை  சீனாவில் நடக்க உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியினருக்கான பயிற்சி முகாம் கோவா மாநிலத்தில் உள்ள பஞ்சிம் என்ற பகுதியில் நடந்தது. இந்த பயிற்சி முகாம் வாயிலாக இந்தியா முழுவதும் இருந்து 40 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் இறுதிப்பட்டியலில் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டனர்.
இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த நெய்வேலி ஜவகர் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவர் சிவப்பிரியன் இடம் பெற்றுள்ளார். சாதனை மாணவர் சிவப்பிரியனை ஊக்கப்படுத்தும் வகையில் நெய்வேலி ஜவகர் கல்விக்கழகம் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசாக வழங்கி கவுரவித்துள்ளது.
அதுபோலவே நெய்வேலி ஜவகர் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவி ஸ்ரீஜா சேஷாத்ரி, குஜராத் மாநிலத்தில் நடந்த 22வது தேசிய சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இதன் வாயிலாக துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்க உள்ள சதுரங்க போட்டியில் விளையாட ஸ்ரீஜா சேஷாத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாணவர் சிவப்பிரியன், மாணவி ஸ்ரீஜா சேஷாத்ரி ஆகியோரை என்.எல்.சி., நிர்வாகம் மற்றும் ஜவகர் கல்வி கழகம் பாராட்டியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us