தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படிப்பை தொடர வறுமை தடை: கலெக்டரை நாடிய மாணவி!

படிப்பை தொடர வறுமை தடை: கலெக்டரை நாடிய மாணவி!

படிப்பை தொடர வறுமை தடை: கலெக்டரை நாடிய மாணவி!


UPDATED : நவ 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை:
வறுமை காரணமாக, படிப்பைத் தொடர குடும்பத்தினர் தடைவிதித்ததால், மாநகராட்சி பள்ளி மாணவி ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
மதுரை செல்லூரைச் சேர்ந்த மாரியப்பன், ஞானம் தம்பதியின் மகள் விஜயலட்சுமி. சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். மாரியப்பன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதால், ஞானம் கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்.
விஜயலட்சுமி படிப்பு மற்றும் கட்டுரை, பேச்சு உட்பட பலவித போட்டிகளில் ஆர்வம் உள்ளவர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 369 மதிப்பெண் பெற்றுள்ளார். சாப்பிட வழியற்ற நிலையில், தாய் ஞானமும், சகோதரனும் விஜயலட்சுமியை பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தனர்.
மனமுடைந்த விஜயலட்சுமி, நவ. 3ம் தேதி கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தார். மனுவை பரிசீலித்த டி.ஆர்.ஓ., அம்மாணவி படிப்பதற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
மாணவி விஜயலட்சுமி கூறுகையில், ‘எனக்கு விவரம் தெரியும் முன்பே, என் தந்தை குடும்பத்தை விட்டு சென்று விட்டார். எனது குடும்பம் கடனில் தவிக்கிறது. எனது தாயின் வருமானம் வட்டி கட்டவே சரியாக இருக்கிறது. எனவே, குடும்பத்தினர் என்னை பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுக்கின்றனர். எனவே, படிப்பதற்கு கலெக்டரிடம் உதவி கேட்டு வந்துள்ளேன்’ என்றார்.
இந்த மாணவிக்கு உதவ விரும்புபவர்கள், ‘11, மூவேந்தர் இல்லம், அய்யனார்கோவில் நான்காவது தெரு, செல்லூர், மதுரை- 2’ என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us