தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கும்பகோணம் பள்ளி சம்பவம்: மாணவ, மாணவியருக்கு நினைவு மண்டபம்

கும்பகோணம் பள்ளி சம்பவம்: மாணவ, மாணவியருக்கு நினைவு மண்டபம்

கும்பகோணம் பள்ளி சம்பவம்: மாணவ, மாணவியருக்கு நினைவு மண்டபம்


UPDATED : நவ 07, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, கும்பகோணம்  ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில், 94 பள்ளி குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். மாணவ, மாணவியர் நினைவாக ரூ.60 லட்சத்தில் கும்பகோணம் பாலக்கரையில், 10 ஆயிரம் சதுரடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது.
நினைவு மண்டபத்தில் நினைவுத் தூண், தியான மண்டபம், மின்விளக்குகள், பூங்கா மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை அமைக்க, வரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டது. ரூ.29.5 லட்சம் செலவில் நினைவுத் தூண், கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உருவாக்கினர்.
கும்பகோணம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில், தியான மண்டபம், அலங்கார மின்விளக்குகள், அழகிய பூங்கா, சுற்றுச்சுவர் உள்ளிட்டவை ரூ30.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இப்பணிகள் நிறைவடைந்து நவ., 6ம் தேதி திறப்பு விழா நடந்தது. நினைவு மண்டபத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அவரிடம் பெற்றோர் வைத்த கோரிக்கைகள்:
தீ விபத்து வழக்கை விரைந்து முடித்து, குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். குழந்தைகள் இறந்த தினத்தை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளூர் விடுமுறை விடவேண்டும்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 51 குடும்பத்தினருக்கு, கொரநாட்டு கருப்பூரில், இலவசமாக தமிழக அரசு வீடு கட்டி தருவதாக உறுதி அளித்திருந்தது. இதில், 25 வீடுகள், கட்டப்பட்டு பாதியிலேயே விடப்பட்டது. அந்த வீடுகளின் பணிகளை நிறைவு செய்து, மீதம் உள்ள 26 பேருக்கும் வீடு கட்டித்தர வேண்டும். இவ்வாறு  கோரிக்கை விடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us