மத்திய பல்கலைக்கழகங்களுக்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு
மத்திய பல்கலைக்கழகங்களுக்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு
UPDATED : நவ 08, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள 24 மத்திய பல்கலைக்கழகங்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக, 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 3,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
திட்ட காலத்தில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் ஒதுக்கப்பட வேண்டிய தொகையை முடிவு செய்வதற்காக, இவற்றின் துணைவேந்தர்களுடன் ஆலோசனையை, பல்கலை மானியக் குழு துவக்கியது.
இந்த பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே அளித்த திட்ட அறிக்கையை விட, மத்திய அரசு ஒதுக்கி உள்ள நிதி குறைவாக இருப்பதால், இந்த ஆலோசனை துவக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் பல்கலைக்கழகங்கள் புதியவர்களை பணியில் நியமிக்கவும், கட்டமைப்பை விரிவுபடுத்தவும், சிறப்பு திட்டங்களை துவக்கவும் உதவும்.
ஒவ்வொரு பல்கலைக்கும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ள தொகை முடிவானதும், அவை துவக்க இருக்கிற சிறப்பு திட்டங்களை அமல்படுத்த அனுமதிக்கப்படும். இதைத் தவிர, புதிதாக அமைக்கப்பட்டு வரும், 16 மத்திய பல்கலைக்கழகங்களுக்கும், அமர்கான்டாக்கில் உள்ள இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்லைக்கழகத்துக்கும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
