தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கிலத்தில் கலக்குவர் அரசு பள்ளி மாணவர்கள்: அமைச்சர் நம்பிக்கை

ஆங்கிலத்தில் கலக்குவர் அரசு பள்ளி மாணவர்கள்: அமைச்சர் நம்பிக்கை

ஆங்கிலத்தில் கலக்குவர் அரசு பள்ளி மாணவர்கள்: அமைச்சர் நம்பிக்கை


UPDATED : நவ 08, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
“அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசி அசத்தக்கூடிய நிலை விரைவில் ஏற்படும். அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கம்ப்யூட்டர் குறித்த அறிவோடு, ஆங்கிலத்தில் பேசக்கூடிய பயிற்சி வழங்கப்படும்,” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சிக்கான ஆசிரியர் பயிற்சி கையேடுகள், ‘சிடி’க்கள், படைப்பாற்றல் கல்விக்கான ஆசிரியர் கையேடுகள் வெளியீட்டு விழா, பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் நடந்த விழாவில், பயிற்சி கையேடுகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியைகளுக்கு கம்ப்யூட்டர்களை வழங்கி, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தாய்மொழியான தமிழ் மொழியில் மாணவர்கள் படிப்பது முக்கியம். அதே நேரத்தில், உலகளாவிய அளவில் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கான முக்கிய மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. எனவே, அந்த மொழியில் சிறப்பாக பேசுகின்ற, எழுதுகின்ற ஆற்றல் மாணவர்களுக்கு இருந்தால் தான், எதிர்காலத்தில் அவர்களால் சிறந்து விளங்க முடியும்.
அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசி அசத்தக்கூடிய நிலை விரைவில் ஏற்படும். அதற்காகத் தான் எளிய முறையில் ஆங்கிலம் பேசுவதற்காக ‘சிடி’க்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்படும். 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 முடித்துவிட்டு பள்ளியை விட்டு வெளியே வரும் மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அளவிற்கு அவர்களை தயார்படுத்துவோம்.
பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வகங்களுடன், மொழி ஆய்வகங்களையும் ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கவுரவ ஆலோசகர் விஜயகுமார் பேசுகையில், “கதை, பாட்டு, இசை போன்றவற்றின் மூலம் ஆங்கிலப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆங்கிலத்தை கற்றுக்கொள்கிறோம் என்பதையே மாணவர்கள் உணராத அளவிற்கு, ஆங்கிலப் பயிற்சியை அளிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது.
இரண்டு ‘கேரக்டர்களுடன்’ மாணவர்கள் உரையாடுவது போல் ‘ஆடியோ’ தயாரிக்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் மத்தியில் ஒலிபரப்புவதோடு, அது குறித்து ஆசிரியரும் பயிற்சி அளிப்பார்,” என்று தெரிவித்தார்.
எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் வெங்கடேசன் பேசுகையில், “ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டம், அனைத்து ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளிலும் வரும் 10ம் தேதி முதல் நடைபெறும்,” என்றார். 3, 4, 5 வகுப்பு மாணவர்களுக்கு, மூன்று கட்டங்களாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us