மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பட்டமளிப்பு விழா
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பட்டமளிப்பு விழா
UPDATED : நவ 10, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
திருநெல்வேலி: நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழா நவ.,11ம் தேதி நடக்கிறது.
நெல்லை பல்கலை துணைவேந்தர் சபாபதிமோகன் நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா நவ., 11ம் தேதி பகல் 12 மணிக்கு அபிசேகப்பட்டியில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்கிறது.
கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை வகித்து பட்டங்களை வழங்குகிறார். தமிழக உயர்கல்விமன்ற உறுப்பினர் செயலர் பாஸ்கரன் பட்டமளிப்பு உரையாற்றுகிறார்.
விழாவில் பி.எச்டி பட்டம்பெற்ற 186 பேருக்கும், இளங்கலை, முதுநிலை படிப்புகளில் ரேங்க் மற்றும் தங்கப்பதக்கம் பெற்ற 122 பேருக்கு கவர்னர் நேரடியாக பட்டங்களை வழங்குகிறார். 26 ஆயிரத்து 903 பேர் பட்டங்களை தபால் மூலம் பெற்றுக்கொள்கின்றனர்.
விழாவில் பங்கேற்க கவர்னர் பர்னாலா ஹெலிகாப்டரில் வருகிறார். மாலையில் ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். நெல்லை பல்கலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக 2.5 லட்சம் ரூபாய் முதல்வரிடம் வழங்கப்படுகிறது. இவ்வாறு துணைவேந்தர் கூறினார்.
