தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு டி.வி.ஆர்., பதக்கம்

மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு டி.வி.ஆர்., பதக்கம்

மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு டி.வி.ஆர்., பதக்கம்


UPDATED : நவ 10, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


காஞ்சிபுரம்:
மாவட்ட அளவில் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் ஐயம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் செல்வமணி இரண்டாமிடம் பெற்றார். இந்த மாணவன், காஞ்சிபுரத்தில் நடந்த தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டார்.
தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, மாணவன் செல்வமணியைப் பாராட்டி தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு வெள்ளிப் பதக்கத்தை அணிவித்தார். அத்துடன் டாக்டர் அப்துல்கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
அதைப் பெற்றுக்கொண்ட மாணவன் செல்வமணி பேசியதாவது:
நான் தினமும் காலை 4 மணிக்கு எழுந்து படிப்பேன். இது தேர்வு பயத்தைப் போக்கியது. பள்ளியில் நடத்திய மாதிரித் தேர்வு கேள்விகளுக்கான பதில்களை அடிக்கடி எழுதிப்  பார்த்ததால், பொதுத்தேர்வு எழுதியபோது சாதாரண தேர்வு எழுதுவதுபோல் உணர்ந்தேன்.
கடந்த முறை தேர்வின்போது கேள்வித்தாள்களைப் படிக்க கூடுதலாக 10 நிமிடம் அளித்தனர். அப்போது மனதை ஒருமுகப்படுத்தி தேர்வை தெளிவாக நன்றாக எழுதினேன். இவ்வாறு மாணவன் செல்வமணி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us