தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மத்திய கல்வி நிறுவனங்களில் காலியிடம்: உத்தரவுக்காக காத்திருக்கும் அரசு

மத்திய கல்வி நிறுவனங்களில் காலியிடம்: உத்தரவுக்காக காத்திருக்கும் அரசு

மத்திய கல்வி நிறுவனங்களில் காலியிடம்: உத்தரவுக்காக காத்திருக்கும் அரசு


UPDATED : நவ 11, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


புதுடில்லி:
மத்திய கல்வி நிறுவனங்களில், 2 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு மீண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்காக காத்திருக்கிறது மத்திய அரசு.
இதர பிற்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு, உயர் கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டு அமலுக்கு வந்தது. இதன்படி, மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றது. ஆனாலும், பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் கிடைக்காததால், 24 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் 54 மத்திய கல்வி நிறுவனங்களில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சில ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.
இப்படி காலியாக இருக்கும் இடங்களை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். காலியிடங்களில் அவர்களைச் சேர்க்க வேண்டும் என, கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அக்டோபர் மாதத்திற்குள் இந்த மாணவர்கள் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
இதற்கிடையில், பிற்பட்ட வகுப்பினரில் முன்னேறிய பிரிவினருக்கான (கிரீமிலேயர்) ஆண்டு வருமான வரம்பை மத்திய அரசு 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 4.5 லட்சம் ரூபாயாக உயர்த்தியது. இதனால், இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மேலும் பல மாணவர்கள், மத்திய கல்வி நிறுவனங்களில் சேரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இருப்பினும், இந்த மாணவர் சேர்க்கையை நிறைவேற்ற வேண்டும் எனில், சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி பெற வேண்டும். இது தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. அப்போது, கோர்ட் உத்தரவு பிறப்பித்த பின்னரே, மாணவர் சேர்க்கையை தொடர முடியும். அதற்காக மத்திய அரசு காத்திருக்கிறது என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக உயரதிகாரி கூறினார்.
டில்லியில் நவ., 10ம் தேதி நடந்த பல்கலை துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அந்த அதிகாரி கூறுகையில், ‘நாடு முழுவதும் உள்ள 24 மத்திய பல்கலைக்கழகங்களில், இதர பிற்பட்ட வகுப்பினருக்காக 8,240 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இவற்றில், 5,599 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதிக பட்சமாக டில்லி பல்கலையில் 2,023 இடங்கள் காலியாக உள்ளன.
அதற்கு அடுத்தபடியாக பனாரஸ் இந்து பல்கலையில் 109 இடங்களும், ஐதராபாத் பல்கலையில் 76 இடங்களும், ஜவகர்லால் நேரு பல்கலையில் 29 இடங்களும் காலியாக உள்ளன‘ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us