தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நெல்லை பல்கலைக்கழக விழாவில் 276 பேருக்கு பட்டம்

நெல்லை பல்கலைக்கழக விழாவில் 276 பேருக்கு பட்டம்

நெல்லை பல்கலைக்கழக விழாவில் 276 பேருக்கு பட்டம்


UPDATED : நவ 12, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


திருநெல்வேலி:
நெல்லை பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 276 பேருக்கு கவர்னர் பர்னாலா பட்டங்களை வழங்கினார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 16வது பட்டமளிப்பு விழா நவ. 11ம் தேதி நடந்தது. தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா விழாவிற்கு தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
துணைவேந்தர் சபாபதிமோகன் பேசுகையில், ‘நெல்லை பல்கலையில் மாணவர் விருப்பத்திற்கேற்ப பாடங்களை தேர்வு செய்து பயிலும் ‘சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம்’ (சி.பி.சி.எஸ்.,) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இளங்கலை, முதுகலைகளில் 47 பாடத்திட்டக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக உயர்கல்வி அமைச்சரால் உயர்கல்வி ஆணையத்தின் வழிகாட்டுதலில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பல்கலையில் ஒவ்வொரு துறையும் ஒரு பேராசிரியரின் பொறுப்பில் வளர்ச்சியை நோக்கிசெல்கிறது. தொலைநிலைக் கல்விக்காக நெல்லை மாநகர பகுதியில் புதிய அலுவலகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் சேரும் வாய்ப்புள்ளது. வருமானமும் 10 கோடி ரூபாய் வர வாய்ப்புள்ளது.
எல்லையில்லா பல்கலை என்ற கொள்கையில் பன்னாட்டு மாணவர்களும் நம் பல்கலையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளோம். இதுவரை 4 பேருக்கு வழங்கப்பட்ட இளம் ஆராய்ச்சியாளர் உதவித்தொகையை இனி 8 பேருக்கு வழங்க உள்ளோம். குறைந்த செலவில் கல்வியளிக்க சாட்டிலைட் கல்விமையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
ராஜாக்கமங்கலத்தில் நானோ உயிரிதொழில்நுட்ப பாடத்திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்திய தொழில்கூட்டமைப்புடன் (சிஐஐ) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி வாழ்வியல்திறன் மேம்பாடு, நேர மேலாண்மை, குழுப்பணி மேற்கொள்ளல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்காக மாணவர்களை தயார்படுத்தும் பயிற்சியளிக்கப்பட உள்ளது. நெல்லை கலெக்டரின் நிதியுதவி 75 லட்சம் ரூபாய் மற்றும் இந்தியன்வங்கி நிதியுதவி 25 லட்சம் ரூபாய் செலவில் மாணவர் விடுதி கட்டடம் கட்ட உள்ளோம். நெல்லை பல்கலையில் முதன்முறையாக 10 பேராசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கியுள்ளோம்.
பாளையங்கோட்டை மத்திய சிறை வாழுநர்கள் 15 பேருக்கு பட்டங்கள் வழங்கியுள்ளோம் இவ்வாறு துணைவேந்தர் சபாபதிமோகன் பேசினார்.
விழாவில் 186 பேர் பிஎச்.டி.,க்காகவும், 26 பேர் எம்.பில்.,35 பேர் முதுகலை, 61 பேர் இளங்கலை என மொத்தம் 308 மாணவ, மாணவியர்களில் விழாவுக்கு வராத 32 பேர் தவிர அனைவருக்கும் கவர்னர் பட்டங்களை வழங்கினார்.
பதிவாளர் கோபாலகிருஷ்ணன், தேர்வாணையர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us