தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம்: ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம்: ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம்: ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு


UPDATED : நவ 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


விழுப்புரம்:
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நவ. 14ம் தேதி முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடத்தப்படும் என மாநில பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் கூறினார்.
விழுப்புரத்தில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பிள்ளைகளுக்கு எந்த முறையில் பாடங்கள் கற்பிக்க வேண்டும் என்ற அதிகாரம் ஆசிரியர்களுக்கு உண்டு. ஆனால் அவற்றை அரசு நிர்ணயிப்பது தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது.
தமிழகத்தில் அரசு செயல்முறை கல்வி திட்டத்தை மாணவர்களின் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாமல் வேறு பள்ளிகளுக்கு தனது பிள்ளைகளை கொண்டு செல்கின்றனர். இதனால் அரசு உதவி பெறும், நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பள்ளிகளில் நாளுக்கு நாள் குழந்தைகளின் சேர்க்கை குறைந்து வருகிறது.
தமிழக அரசு மாணவர்களுக்காக இலவச பஸ் பாஸ், உடைகள் போன்ற சலுகைகள் அளித்தாலும் சேர்க்கைகள் குறைந்து வருவதை அரசு கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் இல்லாத டெப்டேஷன் மூலம் 200 பள்ளிகளும், 1200 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 120 ஆரம்ப பள்ளிகளிகளில் தலைமை ஆசிரியரியர்கள் இல்லை.
அரசு 96 மாணவர்களுக்கு ஐந்து ஆசிரியர்கள் என்ற நிலையை மாற்றி 99 மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் என்று குறைத்துள்ளது. ஐந்து ஆசிரியர் பள்ளிகள் அனைத்தும் இரண்டு ஆசிரியர்கள் பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகிறது. வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோர்ட் உத்தரவை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.
மாநில அரசு ஆரம்ப கல்விக்கு 480 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடும், அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் நகராட்சி, உள்ளாட்சி துறையினர் நிதி வசூலித்து வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 28 பாட புத்தகங்களிலுள்ள 528 பாடங்களை கற்பித்து 663 திறன்களை பெற்று ஆறாம் வகுப்பிற்கு செல்ல வேண்டும். அவ்வாறு இல்லாததால் உயர் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கடந்த ஒரு ஆண்டாக 13 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். தற்போது தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 10 ஆயிரம் பேர் வரும் 14 ம் தேதி முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடக்கிறது.
இதன் பிறகும் முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வரும் 22ம் தேதி சென்னையை தவிர மற்ற 28 மாவட்டங்களில் உள்ள பல பகுதியில் உள்ள ஆசிரியர்கள் சைக்கிளில் பேரணியாக சென்று கலெக்டர் அலுவலகம் எதிரே மறியல்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us