தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டத்தை திருப்பி கொடுத்த மாணவி: நெல்லை பல்கலை விளக்கம்

பட்டத்தை திருப்பி கொடுத்த மாணவி: நெல்லை பல்கலை விளக்கம்

பட்டத்தை திருப்பி கொடுத்த மாணவி: நெல்லை பல்கலை விளக்கம்


UPDATED : நவ 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


திருநெல்வேலி:
கவர்னரிடம் பட்டத்தை திரும்பி தந்த மாணவி விவகாரம் குறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் சபாபதிமோகன் விளக்கமளித்தார்.
நெல்லை பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை சேர்ந்த மாணவி பிருந்தாவுக்கு பிஎச்.டி., பட்டம் பெற்றார். கவர்னர் பர்னாலா பட்டம் பெற்றபோது, அவரிடம் பிருந்தா ஒரு மனுவை அளிக்க முயற்சித்தார். துணைவேந்தர் சபாபதிமோகன், இப்போது மனுகொடுக்க கூடாது என கூறினார். பட்டத்தை பெற்றவர் அதனை மீண்டும் கவர்னர் கையில் கொடுத்துவிட்டு மேடையில் இருந்து இறங்கிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து துணைவேந்தர் சபாபதிமோகன் கூறியதாவது: பிருந்தா பிஎச்.டி.,க்கு விண்ணப்பித்த தலைப்பு கோஸ்டல் அக்குவா கல்சர் எனப்படும் ‘கடலோர நீர் வேளாண் இயல்’ ஆகும். 1999ல் ஆய்வுக்கு விண்ணப்பித்து 2008ல் நிறைவு செய்தார். அண்மையில் அவருக்கு அனுப்பிய தற்காலிக சான்றிதழிலும் அதே தலைப்பை குறிப்பிட்டுள்ளோம்.
வேலை வாய்ப்பிற்காக விலங்கியலில் பிஎச்.டி., பட்டம் தருமாறு கேட்கிறார். அவர் பதிவு செய்த தலைப்பில்தான் பட்டம் வழங்கப்படும். அவருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களில் கடலோர நீர்வேளாண் இயல் என்றே குறிப்பிட்டுள்ளோம். ஒரு முறை அவரது ஆசிரியர்கள் அனுப்பிய கடிதத்தில் விலங்கியல் என்றும் பல்கலையில் இருந்து அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் விலங்கியல் எனவும் தகவல்தொடர்பு நடந்துள்ளது.
நெல்லை பல்கலையில் விலங்கியல், தாவரவியல் துறைகள் கிடையாது. விலங்கியலில் பட்டம் வேண்டுமென பல்கலையில் யாரையும் அணுகவில்லை. கவர்னர் விழாவில் அவமதிப்பு செய்தது முறையல்ல. அவருக்கு இடையில் தவறாக வணிகவியல் சான்றிதழ் அனுப்பியதாக அவர் கூறுவதிலும் உண்மை இல்லை. இதுகுறித்து கவர்னர் அலுவலகத்திற்கும் தகவல் அனுப்பியுள்ளோம்.
இப்போதுகூட அம்மாணவி விண்ணப்பித்தால் விலங்கியல் மற்றும் கடலோர நீர்வேளாண் இயல்-இரு துறை சார்ந்த (இன்டெர் டிசிப்ளினரி) என பட்டம் வழங்க தயாராக உள்ளோம். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் நோக்கமில்லை. அதுபற்றி சிண்டிகேட் குழுதான் முடிவெடுக்கும் என்றார். பேட்டியின் போது பதிவாளர் கோபாலகிருஷ்ணன், தேர்வாணையர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us