UPDATED : நவ 14, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
கோவை: இலங்கை தமிழருக்கு உதவ, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
பல்கலையைச் சேர்ந்த அனைத்து நிரந்தர பணியாளர்கள் (ஆசிரியர்கள், அலுவலர்கள்) தங்களது ஒரு நாள் சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். இதற்கான வரைவோலையை தமிழக முதல்வர் கருணாநிதியிடம், பல்கலை துணைவேந்தர் ராமசாமி வழங்கினார்.
அப்போது பல்கலையின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனர் சுப்பையன், நீர் நுட்பவியல் மைய இயக்குனர் ரங்கசாமி, தாவர மூலக்கூறு உயிரியல் மைய இயக்குனர் பாலசுப்பிரமணியன், நகர்ப்புற தோட்டக்கலை மேம்பாட்டு மைய தலைவர் சாந்தி உடனிருந்தனர்.
