நாகஸ்வர ஆசிரியரை எதிர்த்து இசைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
நாகஸ்வர ஆசிரியரை எதிர்த்து இசைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
UPDATED : நவ 14, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: சென்னையில் உள்ள தமிழ்நாடு, அரசு இசைக் கல்லூரி மாணவர்கள் நவ. 13ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அடையாறில், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில், நாகஸ்வரத் துறை மாணவர்கள் உட்பட 150 பேர், கல்லூரி நுழைவுவாயில் முன்பாக திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது:
நாகஸ்வர துறை ஆசிரியராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பாலமுரளிக்கு போதிய தகுதி இல்லை. மேலும், ஏற்கனவே பணிபுரிந்த சேலம், காஞ்சிபுரம் கல்லூரிகளிலிருந்து இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரால், மாணவர்களுக்கு நல்ல முறையில் கற்றுத் தர இயலாது.
இவர் பயிற்றுவிக்கும் போது, நாதஸ்வரத்தை கையாளுவதில்லை. இதனால், எங்களுக்கும் நாதஸ்வரம் வாசிக்கும் முறையை அறிந்து கொள்ள இயலாமல் போகிறது.
இவர் பணியில் தொடர்ந்தால், நாங்கள் பாதிக்கப்படுவதுடன், வரும் காலத்தில் இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்படும். இந்த ஆசிரியரை உடனடியாக மாற்றி விட்டு வேறு நல்ல ஆசிரியரை நியமிக்க வேண்டும். இவ்வாறு மாணவர்கள் கூறினர்.
