தமிழ்நாடு வேளாண் பல்கலையுடன் ஸ்ரீ சக்தி கல்லூரி ஒப்பந்தம்
தமிழ்நாடு வேளாண் பல்கலையுடன் ஸ்ரீ சக்தி கல்லூரி ஒப்பந்தம்
UPDATED : நவ 15, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை- ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ஆற்றல் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்த உதவும்.
ஒப்பந்தத்தின்படி உலக முக்கியத்துவம் வாய்ந்த ஆற்றல் தொடர்பான தலைப்புகளை கண்டறிந்து தேசிய மற்றும் உலகளாவிய கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தல், ஆற்றல் சேமிப்பு, ஆற்றல் திறன், ஆற்றல் தணிக்கை, எரிமின்கலம், ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு தொடர்பாக உலகளாவிய நிதியுதவி அளிக்கும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து, அவற்றிலிருந்து பெறும் நிதியுதவி மூலம் உயிர்சக்தி பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வது உட்பட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தப்படும்.
இந்த ஒப்பந்தத்தில் துணைவேந்தர் ராமசாமி முன்னிலையில், பல்கலை வேளாண்மை பொறியியல் கல்லூரி முதல்வர் சம்பத்ராஜன், ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தலைவர் தங்கவேலு ஆகியோர் கையெழுத்திட்டனர்.
