தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேராசிரியர் சம்பள உயர்வு: நெருக்கடியில் அரசு

பேராசிரியர் சம்பள உயர்வு: நெருக்கடியில் அரசு

பேராசிரியர் சம்பள உயர்வு: நெருக்கடியில் அரசு


UPDATED : நவ 18, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


புதுடில்லி:
பல்கலை மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கான சம்பள உயர்வு பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
பேராசிரியர் ஜி.கே.சத்தா தலைமையிலான கமிட்டி, கல்லூரி மற்றும் பல்கலை பேராசிரியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தும்படி பரிந்துரை அளித்தது. இருந்தாலும், இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இதனால், நாடு முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலை பேராசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை இறுதி செய்யும் முயற்சியில் மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டிற்குள் செயல்படுத்தினால், வரும் லோக்சபா தேர்தலில், அது பெரிய அளவில் தங்களுக்கு உதவும் என மத்திய அரசு வட்டாரங்களும் ஆர்வமுடன் உள்ளன. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் இருப்பதால், பரிந்துரையை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மனித வளம், விவசாயம், நிதி ஆகிய அமைச்சக செயலர்கள் அடங்கிய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, இந்த விஷயம் பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு, ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்துள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை விட அதிகமாக இருப்பதும் முக்கிய பிரச்னையாக உள்ளது. இதில், மத்திய நிதி அமைச்சகத்தின் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us