தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிலிருந்து ‘திடீர்’ நிறுத்தம்

தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிலிருந்து ‘திடீர்’ நிறுத்தம்

தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிலிருந்து ‘திடீர்’ நிறுத்தம்


UPDATED : நவ 20, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
கோவையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, மாநகராட்சி பள்ளிகளில், தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக மூன்று ஆண்டுகள் வேலை செய்து வந்தவர்கள், திடீரென பணியில் இருந்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் கடந்த 1999ம் ஆண்டு ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில்  ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.
இந்த சம்பளத்துக்கு பணியாற்ற விரும்பாத பல ஆசிரியர்கள், ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்  பணியில் இருந்து விலகிக் கொண்டனர். இவர்களுக்குப் பதிலாக புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். சில மாநகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கடந்த 2005ம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் கம்ப்யூட்டர் பாடம் நடத்த தற்காலிக அடிப்படையில்  ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 2005 நவ., மாதம் எல்காட் அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்த போது, தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி உத்தரவு அனுப்பி வைப்பதாக கூறினர்.
இந்நிலையில் 2005ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மட்டும் சமீபத்தில் சிறப்பு தேர்வு நடத்தியது அரசு. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டு, பள்ளியில் சேரும் படி அறிவுரை வழங்கப்பட்டது.
இதனால், ஏற்கனவே பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை கட்டாயமாக பணியில் இருந்து விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் எல்காட் வழங்கிய 2,000 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றியவர்களை வேலையில் இருந்து திடீரென நீக்கியிருப்பதால், அடுத்து என்ன செய்வது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
பணி நிறுத்தம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், “மாநிலம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 500க்கும் அதிகமான காலியிடம் இருக்கிறது. அந்த காலியிடங்களில் எங்களை நியமித்தால், வேலை செய்ய தயாராக இருக்கிறோம். எங்களுக்கும் சிறப்புத் தேர்வு நடத்தி, பணி நிரந்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us