தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பார்ப்பதைவிட, கவனித்தாலே வெற்றி: பர்வீன் சுல்தானா அறிவுரை

பார்ப்பதைவிட, கவனித்தாலே வெற்றி: பர்வீன் சுல்தானா அறிவுரை

பார்ப்பதைவிட, கவனித்தாலே வெற்றி: பர்வீன் சுல்தானா அறிவுரை


UPDATED : நவ 20, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
“வகுப்பறையில் ஆசிரியரை பார்க்கிறவனை விட, கவனிக்கிறவன் வெற்றியடைவான்,” என மாநகராட்சி பள்ளி மாணவர்களிடையே, பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசினார்.
‘தினமலர்’  ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், அவர் மேலும் பேசியதாவது:
பத்தாம் வகுப்பு படிக்கும் நீங்கள், வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது உங்களுக்கு அற்புதமான வாய்ப்பு. நான் படிக்கும்போது இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. வாழ்க்கையில் நாம் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தால், வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
வகுப்பறையில், ஆசிரியரை பார்க்கிறவனை விட, கவனிக்கிறவன் வெற்றியடைவான். அதற்காக, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான், வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். புத்தகங்கள் எப்போதும் நம்மிடம் பேசும். நீங்கள் தான் புத்தகங்களை ஜெயிக்க வேண்டும். அவை நம்மை ஜெயிக்க அனுமதிக்கக் கூடாது.
நீங்கள் உச்சத்தை தொட வேண்டுமானால், பல புயல்களை கடக்க வேண்டியதிருக்கும். அத்தகைய புயல்களை, தாண்டினால் தான் தென்றலை உணர முடியும். புயலை தாண்டி சாதிக்கும் திறமை உங்களுக்கு இருக்கிறது. விழிப்புணர்வு, தன்னுணர்வு மற்றும் புரிந்துணர்வு உங்களிடம்  இருந்தால் வெற்றி நிச்சயம்.
மாநகராட்சி பள்ளி மாணவர்களாகிய உங்களுக்கு கவனம், கடின உழைப்பு ஆகியவை மிகவும் முக்கியமாக வேண்டும். மற்ற பள்ளி மாணவர்களை விட உங்களிடையே கவனம் குறைவாக உள்ளது. சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் கவனமின்மை தான் பிரச்னையாக உள்ளது. அதிக கவனத்துடன் இருப்பவர்கள் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்.
‘எக்சலன்சி’ என்பதை நிர்ணயிப்பது, ஒரு மதிப்பெண் தான். அந்த மதிப்பெண்ணை நீங்கள் கூடுதலாக பெற வேண்டும் என்பதற்காக தான் ‘தினமலர்’ இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இங்கு ஆசிரியர்கள் தரும் குறிப்புகளை கவனமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஏதும் தெரியவில்லை என்று அவமானம் கொள்ளாதீர்கள். படிப்பில் தீவிரமாக இருப்பதுடன், பலவீனங்களை அடக்கி ஆள வேண்டும். குறிப்பாக ஏப்ரல் மாதம் வரை ‘டிவி’ பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள். தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி நிச்சயம். இவ்வாறு பர்வீன் சுல்தானா பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us