தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 அறிவியலில் மார்க் அள்ளிக் குவிக்கும் வழிகள்...

பிளஸ் 2 அறிவியலில் மார்க் அள்ளிக் குவிக்கும் வழிகள்...

பிளஸ் 2 அறிவியலில் மார்க் அள்ளிக் குவிக்கும் வழிகள்...


UPDATED : நவ 21, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நவ. 20ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களை நடத்தும்போது பிளஸ் 2 பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் மதிப்பெண்களை அள்ளிக் குவிப்பதற்கான வழிகள் குறித்து, ஆசிரியர் கனகசபாபதி பல்வேறு ‘டிப்ஸ்’களை வாரி வழங்கினார்.
ஆசிரியர் குறிப்பிட்டதாவது:
* தாவரவியலில் உள்ள ஆறு பாடங்களில் இருந்தும் 119 மதிப்பெண்களுக்கு (சாய்ஸ் உட்பட) கேள்விகள் கேட்கப்படும். இதில், 75 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் விடை அளிக்க வேண்டும்.
* முதல் பாடத்தில் 24 மதிப்பெண்கள், 2ம் பாடத்தில் 23 மதிப்பெண்கள், 3வது பாடத்தில் 10 மதிப்பெண்கள், 4வது பாடத்தில் 20 மதிப்பெண்கள், 5வது பாடத்தில் 32 மதிப்பெண்கள், 6வது பாடத்தில் 10 மதிப்பெண்கள் என மொத்தம் 119 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
* இதில், ஒன்று முதல் ஐந்து வரையிலான பாடங்களை படித்தாலே 75க்கு 69 மதிப்பெண்களை உறுதியாக பெறலாம்.
* ‘மறுசேர்க்கை டி.என்.ஏ., தொழில்நுட்பத்தில் மிக முக்கிய நிகழ்வுகள்’ குறித்து ஐந்து மதிப்பெண் பகுதியில் கண்டிப்பாக ஒரு கேள்வி வரும்.
* ‘வகைபாட்டியல்’ பாடத்தில் இருந்து, ‘டாட்டூரா மெட்டல் தாவரத்தை கலைச்சொற்களால் விவரி’ என்று 10 மதிப்பெண் பகுதியில் ஒரு கேள்வி இந்த ஆண்டு வரலாம். இந்த மதிப்பெண்கள் ஒவ்வொரு பகுதி வாரியாக பிரித்து போடப்படுகிறது. விளக்கத்திற்கு ஏழு மதிப்பெண்கள், மலர் வரைதலுக்கு இரண்டு மதிப்பெண்கள், மலர் சூத்திரத்திற்கு ஒரு மதிப்பெண் என பிரித்து வழங்கப்படுகிறது. எனவே, குறிப்பிட்ட பகுதிகளை எழுதினால் கூட அதற்கான மதிப்பெண்கள் கிடைக்கும்.
* அறிவியல் பாடத் தேர்வில் கேள்விக்கான பதிலை ஒரு பக்கத்திலும், அந்த விடைக்கு தொடர்பான படத்தை வேறொரு பக்கத்திலும் சம்பந்தம், சம்பந்தம் இல்லாமல் அளித்து விடுகின்றனர். இதனால், முழு மதிப்பெண்கள் கிடைக்காது. விளக்கத்தின் தொடர்ச்சியாக படங்களை வரைய வேண்டும்.
* விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, ‘கீ-ஆன்சர்’ வழங்கப்படும். ஒவ்வொரு பாட வினாத்தாளின் விடைகள் தயாரிக்கப்பட்டு, அது வழங்கப்படும். அதில் உள்ள விடைகளின்படி மாணவர்கள் எழுதியிருக்கிறார்களா என்று  பார்த்து தான் மதிப்பெண் வழங்குவோம். ‘கீ-ஆன்சரில்’ முக்கிய வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். அதை மாணவர்கள் எழுதியிருந்தால் மதிப்பெண்கள் அதிகமாக கிடைக்கும். எனவே, முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட்டு எழுத வேண்டும். இவ்வாறு ஆசிரியர் கனகசபாபதி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us