தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.எம்.,மில் படிக்க ஆர்வம் செலுத்தும் அரசு ஊழியர்கள்

ஐ.ஐ.எம்.,மில் படிக்க ஆர்வம் செலுத்தும் அரசு ஊழியர்கள்

ஐ.ஐ.எம்.,மில் படிக்க ஆர்வம் செலுத்தும் அரசு ஊழியர்கள்


UPDATED : நவ 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட், ஆமதாபாத் கல்வி நிறுவனம் பொதுத்திட்டமிடல் உருவாக்கம் பிரிவுகளில் திறன்களை மேம்படுத்தவும் புதிய எல்லைகளைத் தொடவும் புதிய படிப்புகளை நடத்திவருவது நாம் அறிந்ததே. அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள் இந்தப் படிப்புகளைப் படிக்க மிகுந்த ஆர்வம் செலுத்துகிறார்கள்.
இந்தப் பிரிவுப் படிப்புகளைப் படிக்க இந்த ஆண்டு 39 பேருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஒரு ஓய்வுபெற்ற சிப்பாய், ஒரு மருத்துவர், ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி போன்றோர் இணைந்துள்ளனர்.
போஸ்ட் கிராஜுவேட் புரோகிராம் இன் பப்ளிக் மேனேஜ்மென்ட் அண்டு பாலிசி (PGPPMP) என்ற இந்த முதுநிலைப்படிப்பில் இணைந்த 39 பேர்களில் 20 பேர் அரசு ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதே படிப்பில் கடந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையிலான அரசு ஊழியர்களே இணைந்திருந்தனர்.
இந்தக்கல்வி நிறுவனத்தில் இந்தப்பாடப்பகுதிக்கு தலைமை வகிக்கும் செபாஸ்டின் மோரிஸ் இப்படிப்புகள் தொடர்பான சில முக்கிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு நிறுவனங்களும் இந்தப்படிப்புகளுக்கு நிதியுதவி செய்யவேண்டும் என்றும், அரசின் பங்களிப்பு இன்னமும் அதிகளவில் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார் நல்ல நிர்வாகத்திறமைகளை வளர்ப்பது அரசுத்துறை, தனியார்துறை என்பனவற்றைத் தாண்டி இந்த சமூகத்திற்கே பெரும் நன்மைதரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் சிவில் சர்வீசஸ் துறையில் தனியார் நிர்வாகத்தைக் கொண்டுவரும் வகையில் நிர்வாக சீர்திருத்தக்குழு தற்போது விவாதித்து வருவதாக அவர் கூறியுள்ளார். பணியில் உள்ள ஊழியர்களுக்கான இந்தப்படிப்புகளின் இரண்டாவது குழு வகுப்புகள் தற்போது நடந்துவருகிறது. இதில் பயில்பவர்களுக்கு மிகச்சிறந்த அனுபவங்கள் கிடைத்துவருகிறது. ஐ.ஐ.எம்., ஆமதாபாத் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் பலவிதமான உடன்பாடுகள் கொண்டுள்ளதால், இப்படிப்புகளைப் படிக்கும் ஊழியர்களுக்கு மிகச்சிறந்த கல்வி மற்றும் மேம்பாட்டு அனுபவங்கள் கிடைத்து வருகின்றன.
சமூக மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த அம்சங்களில் அரசு, தனியார் மற்றும் நிறுவனங்களுக்கிடையே நல்ல உறவுகளையும் இப்படிப்புகள் ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. நல்ல பகுதிகளை நடைமுறை அறிவுடன் பயிற்றுவிப்பதும் இப்படிப்புகளின் தனிச்சிறப்பாகவுள்ளது.
இந்த ஆண்டின் மொத்த மாணவர்களில் 67 சதவீதம் பேர் அரசு நிறுவனங்களிலிருந்து படிக்க வந்துள்ளனர். இவர்களின் பணி அனுபவம் 12 வருடம் வரை உள்ளதும், மொத்த மாணவர்களின் சராசரி வயது 33 ஆக இருப்பதும் கூடுதல் தகவல்களாக உள்ளது.
இப்படிப்புக்கான கட்டணமும் அதிகம்தான். தற்சமயம் ரூ.12 லட்ச ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டியுள்ளது இந்தக்கட்டணங்களை பெரும்பாலானோர் தங்கள் கைகளிலிருந்தே கட்ட வேண்டியுள்ள சூழல் நிலவுகிறது. இருந்தாலும் படிப்பின் தரத்தில் எந்தக்குறையும் இல்லை. 5 மாடூல்களாக 800 மணி நேர வகுப்புகளில் நடத்தப்படும் இப்படிப்புகள் பணியில் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது எனலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us