சட்ட ரீதியாக அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு: தமிழக அரசு
சட்ட ரீதியாக அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு: தமிழக அரசு
UPDATED : நவ 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அவர் கூறியிருப்பதாவது:
தற்போது ஆதிதிராவிடருக்கு வழங்கி வரும் இட ஒதுக்கீட்டில், இவர்களுக்கென தனி உள்ஒதுக்கீடு வழங்குவது பற்றி, அனைத்துக் கட்சிகளையும் ஆலோசித்து முடிவு செய் யப்படுமென, சட்டசபையில் கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ஜனார்த்தனத்தைக் கொண்ட ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. நீதிபதி ஜனார்த்தனம், அருந்ததியருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அனைத்து பரிமாணங்களையும் விரிவாக ஆய்வு செய்தார்.
அருந்ததியர்களில் சக்கிலியர், மாதாரி, ஆதி ஆந்திரர், பகடை, மடிகா, தோட்டி, அருந்ததியர் ஆகிய பிரிவினரையும் உள்ளடக்கி, அவர்களின் மொத்த மக்கள் தொகை அடிப்படையில், ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் 18 சதவீத இடஒதுக்கீட்டில், 3 சதவீத உள்ஒதுக் கீடு வழங்க பரிந்துரை செய்து, தமிழக அரசிடம் அவர் அறிக்கை அளித்துள்ளார்.
அருந்ததியினருக்கு தனி ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்துள்ள இந்த அறிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க, வரும் 27ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடக்க உள் ளது. இதில், மேற்கொள்ளப்படும் தீர்மானத்தின் அடிப்படையில், அருந்ததியினருக்கு தனி ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அருந்ததியினர் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைய, கருவில் இருக்கும் காலம் முதல் கடைசிக் காலம் வரை வாழ்க்கையின் அனைத்துக் கட்டங்களிலும் அரசின் நிதியுதவி பெற்று நிம்மதியாக இருக்க, துப்புரவுப் பணியாளர் நல வாரியம், காலணி, தோல் பொருள்கள் உற்பத்தி, தோல் பதனிடும் தொழிலாளர் நல வாரியம் என வாரியங்களை தோற்றுவித்து, பல்லாயிரக்கணக்கானோர் பயன் பெற வழிவகுத்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவிலேயே முன்னோடியானதும், வரலாற்றுச் சிறப்புள்ளதுமான, தனி இட ஒதுக்கீடு என்ற நடவடிக்கையால் சமூக நிலையிலும், கல்வி நிலையிலும் அவர்கள் தலைநிமிர்ந்து வாழ வழி பிறந்துள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
