தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: ஒபாமா உறுதி

25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: ஒபாமா உறுதி

25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: ஒபாமா உறுதி


UPDATED : நவ 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


வாஷிங்டன்:
அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அடுத்த இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று, அதிபராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
சம்பந்தமாக வாஷிங்டன்னில் வெளியிட்டுள்ள குடியரசு கட்சியின் வாராந்திர அறிக்கையில் ஒபாமா கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் நிலவும் பொருளாதாரம் மீண்டும் சரியாமல் இருப்பதற்கு, விரைவும், துணிவும் மிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் பணியிடங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை தயாரிப்பதற்கு எனது ஆலோசகரிடம் தெரிவித்துள்ளேன்.
இந்த திட்டம் ஒரேடியாக செயல்படுத்த முடியாது. இது ஒரு நீண்ட கால திட்டமாகும். இந்த திட்டத்தினால் குறுகிய காலத்திற்கு அல்லாமல் நீண்ட காலங்கள் பொருளாதாரத்தை பிடித்து நிறுத்துவதாக அமையும்.
பொருளாதார சரிவை மீட்பதற்கு  கடுமையான தடைகளை எதிர் கொள்ளவேண்டும். அதற்குறிய அடிப்படை திட்டங்களை தயார் செய்யுங்கள் என்று உத்தரவிட்டுள்ளேன். இந்த திட்டங்களால் நல்ல வளர்ச்சி காணவேண்டும். குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் சேர்ந்து ஆதரவும், ஆலோசனையும் தரவேண்டும் என்பது எனது விருப்பம். இவ்வாறு ஒபாமா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us