தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘இரண்டரை மணி நேரத்தில் வரையறுக்கப்படுகிறது வாழ்க்கை’

‘இரண்டரை மணி நேரத்தில் வரையறுக்கப்படுகிறது வாழ்க்கை’

‘இரண்டரை மணி நேரத்தில் வரையறுக்கப்படுகிறது வாழ்க்கை’


UPDATED : நவ 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
‘தினமலர்’ நாளிதழ், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை இணைந்து நடத்தும் ‘ஜெயித்துக்காட்டுவோம்’  நிகழ்ச்சி, பீளமேடு சி.ஐ.டி. கல்லூரி கலையரங்கில் நடந்தது.
ஸ்ரீ கோபால்நாயுடு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வசந்தாமணி பேசியதாவது:
பத்தாம் வகுப்பு மாணவர்களின் வாழ்க்கை, பொதுத்தேர்வு என்ற இரண்டரை மணி நேரத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கேள்வித்தாளை படித்து பார்க்க கூடுதலாக 15 நிமிடம் கால அவகாசம் தரப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால், கேள்வித்தாளைப் பெற்ற மாணவர்கள் பதட்டப்படாமல், தெளிவாக கேள்விகளைப்படித்து புரிந்து கொள்ள வேண்டும்.
பின், தெளிவாக, அழகான எழுத்தில் விடையளிக்க வேண்டும். அப்போதுதான் அதிக மதிப்பெண் பெற முடியும். தேர்வு துவங்கும் சில மாதங்களுக்கு முன் புரியாத பாடத்தை படித்து எழுதுவது இயலாத காரியம். சில மாணவர்கள் மிகச்சிறிதாக எழுதுகின்றனர். தேர்வுத்தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கு இது எரிச்சலூட்டும்.
சில மாணவர்கள் மூன்றாவது கேள்விக்கு விடையளித்து விட்டு, 42 வது கேள்விக்கு விடையளிப்பர். இதுவும் தேர்வுத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடும். சில மாணவர்கள் விடைத்தாளில், ‘மதிப்பெண் போடுங்கள்; இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன்’ எழுதி, தங்களது மொபைல் எண்ணையும் குறிப்பிடுகின்றனர். இதுபோன்ற செயலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கேள்வித்தாள் அவுட் ஆகிவிட்டதாக சிலர் கூறுவர். இதை நம்பி வேறு பாடங்களை புறக்கணித்து விடக்கூடாது. மாணவர்கள் சிலர், ஒரே விடையை மீண்டும் மீண்டும் எழுதுவர். இந்த ஏமாற்று வேலையை ஆசிரியர்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு வசந்தாமணி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us