டில்லி கருத்தரங்கில் தமிழக பேராசிரியர் பாலாம்பாள் பங்கேற்பு
டில்லி கருத்தரங்கில் தமிழக பேராசிரியர் பாலாம்பாள் பங்கேற்பு
UPDATED : நவ 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுடில்லி: சென்னைப் பல்கலைகழத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் வி.பாலாம்பாள், டில்லியில் நடைபெற்ற ஆசிய வரலாற்று அறிஞர்களின் சர்வ தேசக் கூட்டமைப்பு கருத்தரங்கில், ‘சங்க இலக்கிய வரலாறு’ என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்தார்.
ஆசிய வரலாற்று அறிஞர்களின் சர்வதேசக் கூட்டமைப்பு 20வது கருத்தரங்கு, டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 3 நாள் நடந்தது.
இதில் கலந்து கொண்ட சென்னைப் பல்கலைகழக வராலாற்று துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் வி.பாலாம்பாள், ‘சங்க இலக்கிய வரலாறு’ என்ற தலைப்பில் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியவற்றில் இருந்து கட்டுரை ஒன்றை சமர்ப்பித்தார்.
இந்த கருத்தரங்கில் 36 நாடுகளைச் சேர்ந்த 450 அறிஞர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் வி.பாலாம்பாள், இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற பல நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளிலும் ஆய்வறிக்கைகள் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
