10 ஆயிரம் ரூபாயில் குழந்தைகளுக்கான லேப்-டாப் அறிமுகம்
10 ஆயிரம் ரூபாயில் குழந்தைகளுக்கான லேப்-டாப் அறிமுகம்
UPDATED : நவ 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுடில்லி: ரூபாய் 10 ஆயிரத்திற்கு குழந்தைகளுக்கான லேப்-டாப் ஒன்று சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த லேப்-டாப் சூரிய சக்தியில் இயங்கக் கூடியது, ஹார்டு டிரைவ் கிடையாது, கீழே விழுந்தாலும் உடையாது, இதன் கீ போர்டுகள் எல்லாம் தண்ணீர் புகாதவை. மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மீடியா லேப் என்ற நிறுவனம்தான், ‘எக்ஸ் ஓ’ என அழைக்கப்படும் இந்த லேப்-டாப்பை உருவாக்கியுள்ளது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்காகவும், அவர்களுக்கு கல்வி போதிக்க உதவ வேண்டும் என்ற எண்ணத்திலும் இருந்த லேப்-டாப் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த லேப்-டாப்பை, ஏழை குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வரும் லாப நோக்கமில்லாத அமைப்பான, ‘ஒன் லேப்-டாப் பர் சைல்டு பவுண்டேஷன்’ என்ற அமைப்பு அறிமுகப்படுத்தியது.
இந்த, ‘எக்ஸ் ஓ’ வகை லேப்-டாப்’ சிறியதாக மட்டுமின்றி, ஷாக் புரூம் அம்சம் கொண்டது என்பதால், கீழே விழுந்தாலும் உடையாது. இரண்டு வாட் மின் சக்தியில் இயங்கக் கூடியது. மின்சார சிக்கனமானது.
