"ராகிங்"கில் ஈடுபட்டால் டிஸ்மிஸ்: சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர்
"ராகிங்"கில் ஈடுபட்டால் டிஸ்மிஸ்: சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர்
UPDATED : ஆக 02, 2013 12:00 AM
ADDED : ஆக 02, 2013 09:41 AM
விழாவில், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகசபை கூறியதாவது: சென்னை மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள், ராகிங்கில் ஈடுபடுவதை தடுக்க, பேராசிரியர்கள் தலைமையில், ராகிங்குக்கு எதிரான குழு அமைக்கப்பட்டு உள்ளது. புதிய மாணவர்களுக்கு,
ராகிங் பயத்தை போக்க, புகார் பெட்டியும், முதல்வர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. ராகிங் தொடர்பாக மாணவர் மீது ஏதேனும் புகார் வந்தால், 3,000 ரூபாய் அபராதத்துடன், மூன்று ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதோடு, தமிழகத்தில் வேறு எந்த கல்லூரியிலும் படிக்க அனுமதிக்கப்பட மாட்டார். மூத்த மாணவர்களும், ராகிங்கில் ஈடுபட கூடாது. மேலும், புது மாணவர்கள் செல்லும் வகுப்பறைகள், விளையாட்டு திடல், நூலகம் மற்றும் உணவு விடுதிகளில், "ராகிங்" செய்வதை தடுக்க, உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பெண்கள் விடுதியில், ஒரு பெண் உதவி மருத்துவரும், ஆண்கள் விடுதியில் ஒரு ஆண் உதவி மருத்துவரும், தினமும் சுழற்சி முறையில், மாலை, 6:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை, புதிய மாணவர்களை மேற்பார்வை செய்யவும், அங்கே தங்கியிருந்து திடீர் ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். முதலாமாண்டு புது மாணவர்களுக்கு, விடுதியில் தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, கனகசபை கூறினார்.