புதுவை மருத்துவ கவுன்சிலிங் 44 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலி
புதுவை மருத்துவ கவுன்சிலிங் 44 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலி
UPDATED : ஆக 03, 2013 12:00 AM
ADDED : ஆக 03, 2013 10:57 AM
புதுச்சேரி: நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேர மாணவர்கள் தயக்கம் காட்டி வருவதால் நேற்றைய கவுன்சிலிங் முடிவில் 44 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளது.
மருத்துவ படிப்பிற்கான இறுதி கட்ட கவுன்சிங் நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கியது. புதுச்சேரி பொதுப் பிரிவு மாணவர்களுக்கு மாலை 3:00 மணிக்கு கவுன்சிலிங் துவங்கியது. இதில், கட் ஆப் மதிப்பெண் 200 முதல் 190 வரை எடுத்த 178 மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.
குறைந்த எம்.பி.பி.எஸ்.., இடங்களே இருந்ததால், டாப் ரேங்கில் இருந்த 100 மாணவர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் அரசு மருத்துவ கல்லூரி, பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரப்பியது. நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் கட்டணம் அதிகமாக இருந்தால் சீட் எடுக்க மாணவர்களிடையே தயக்கம் காணப்பட்டது. அதனால் அந்த கல்லூரியில் 44 இடங்கள் நிரப்பவில்லை.
இன்று 2ம் தேதி காலை 9:00 மணிக்கு கட் மதிப்பெண் 183.666 முதல் 178.222 வரை, 10:00 மணிக்கு 178 முதல் 173 வரை, 11:00 மணிக்கு 172.666 முதல் 166.333 வரை, 12:00 மணிக்கு 166 முதல் 159.666 வரை, 2:00 மணிக்கு 159.333 முதல் 152.333 வரை, மாலை 3:00 மணிக்கு 152 முதல் 143.333 வரை, 4:00 மணிக்கு 143 முதல் 133.666 வரை எடுத்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
நாளை 3ம் தேதி காலை 9:00 மணிக்கு 133.333 முதல் 123.666 வரை, 10:00 மணிக்கு 123.333 முதல் 111.666 வரை, 11:00 மணிக்கு 111.333 முதல் 93.667 வரை, 12:00 மணிக்கு 93.500 முதல் 80 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.