sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஒழுக்கம் தவறும் மாணவர்களால் பாதிப்புக்குள்ளாகும் மக்கள்

/

ஒழுக்கம் தவறும் மாணவர்களால் பாதிப்புக்குள்ளாகும் மக்கள்

ஒழுக்கம் தவறும் மாணவர்களால் பாதிப்புக்குள்ளாகும் மக்கள்

ஒழுக்கம் தவறும் மாணவர்களால் பாதிப்புக்குள்ளாகும் மக்கள்


UPDATED : ஆக 03, 2013 12:00 AM

ADDED : ஆக 03, 2013 11:11 AM

Google News

UPDATED : ஆக 03, 2013 12:00 AM ADDED : ஆக 03, 2013 11:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மாண­வர்கள் போதையில் பேருந்தில் அட்­ட­காசம் செய்­ததால், பாதி வழியிலேயே பேருந்து நிறுத்­தப்­பட்­டது. இதனால், பய­ணிகள் மிகுந்த சிர­மத்­திற்கு ஆளா­கினர்.

சென்­னையில் உள்ள, பிர­பல கல்லூரி மாண­வர்­களின் அட்­ட­கா­சங்கள், அத்­துமீ­றல்கள் தொடர்க­தை­யாகி வரு­கின்­றன. இந்த நிலையில், நேற்று பிற்­பகல், பழ­மை­யான கல்லூ­ரியை சேர்ந்த, 20க்கும் மேற்­பட்ட மாண­வர்கள், கோயம்பேடு அண்­ணா­ ச­துக்கம் செல்லும் (தடம் எண் 27பி) பேருந்தில், கண்­ணகி சிலை பேருந்து நிறுத்தத்தில் ஏறினர்.

அதில், மது அருந்தி விட்டு, போதையில் இருந்த சில மாண­வர்கள், பேருந்தின் கூரை மீதும், சிலர், படிக்­கட்­டுக்­களில் நின்றும், பக்­க­வாட்டு கம்­பியை பிடித்­த ப­டியும் பய­ணித்­தனர். ஓட்­டுனர் மற்றும் நடத்­துனர் கேட்டுக் கொண்டும், மாண­வர்கள், அவர்கள் விருப்பம் போல் பய­ணித்­தனர்.

பேருந்து, எழி­லகம் அருகே வந்த போது, போதையில் மேற்­கூ­ரையில் ஆட்டம் போட்ட ஒரு மாணவர், தடு­மாறி கீழே விழுந்தார். இதனால், பேருந்து நிறுத்தப்­பட்­டது. சக மாண­வர்கள், கீழே விழுந்த மாண­வனை தூக்கி, ஆசுவாசப்­படுத்­தி­, மீண்டும் அதே பேருந்தில் ஏற்றினர். இதனால், 20 நிமிடம் தாமத­மாக பேருந்து புறப்­பட்­டது. இந்த போதை மாண­வரால், பய­ணிகள் மிகுந்த சிர­மத்திற்கு ஆளா­கினர்.

இதுகுறித்து, போக்­கு­வ­ரத்து கழக ஊழி­யர்கள் கூறு­கையில், "கல்­லூரி துவங்­கிய நாள் முதல் மாண­வர்­களால் நாங்கள் பல இன்­னல்­க­ளுக்கு ஆளா­கி­யுள்ளோம். இவர்­களால் பேருந்தில் வரும் பய­ணிகள் மட்­டு­மின்றி, எங்­க­ளுக்கும் எவ்­வித பாது­காப்பும் இல்லை" என்­றனர்.






      Dinamalar
      Follow us